fbpx

”எங்களுக்கு பயமா இருக்கு”..!! அச்சுறுத்தும் ஆட்டோ ஓட்டுநர்கள்..!! பைக் டாக்ஸி ஓட்டுநர்கள் பரபரப்பு புகார்..!!

சென்னை முழுவதும் ஓலா, ஊபர் உள்ளிட்ட நிறுவனங்கள் மூலம் 20,000-க்கும் மேற்பட்டோர் தனியார் பைக் டாக்ஸிகளை ஓட்டி வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் சார்பாக பைக் டாக்ஸிக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில், “எங்களை அச்சுறுத்தும் விதமாக ஆட்டோ ஓட்டுநர்கள் பைக் டாக்ஸி ஓட்டுநர்களை தாக்குவதாகவும், பெண் பைக் டாக்ஸி ஓட்டுநர்களை அச்சுறுத்தும் விதமாக ஆட்டோ ஓட்டுநர்கள் ஈடுபடுவதாகவும் பைக் டாக்ஸி ஓட்டுநர்கள் புகார் அளித்துள்ளனர்.

இதுதொடர்பாக தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்தில் பைக் டாக்சி அசோசியன் சார்பில் அளிக்கப்பட்ட புகாரில், “மத்திய அரசின் வழிகாட்டுதல்படி, பைக் டாக்ஸி சேவை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இயங்கி வருகிறது. தமிழ்நாட்டிலும் உரிய ஆவணங்களுடன் பைக் டாக்ஸி ஓட்டுநர்கள் தொடர்ந்து பணிபுரிய எந்த தடையும் இல்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆனால், எங்களை பணி செய்யவிடாமல், சில ஆட்டோ ஓட்டுநர்கள் அச்சுறுத்தி வருகின்றனர்.

இம்மாதிரியான அச்சுறுத்தும் நடவடிக்கைகள் வாடிக்கையாளர்கள் பைக் டாக்ஸி சேவையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, இதையே நம்பி இருக்கும் பைக் டாக்ஸி ஓட்டுனர்களின் வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்படுகிறது. அச்சுறுத்துபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா..!! கூட்டுக்குழுவுக்கு அனுப்ப வாக்கெடுப்பு..!! ஆதரவு, எதிர்ப்பு எத்தனை பேர் தெரியுமா..?

English Summary

Bike taxi drivers have complained that auto drivers are attacking bike taxi drivers to threaten them, and that auto drivers are threatening female bike taxi drivers.

Chella

Next Post

கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கு: சிபிஐ விசாரணைக்கு தடையில்லை..! தமிழக அரசு மனு தள்ளுபடி..! உச்ச நீதிமன்றம் அதிரடி..!

Tue Dec 17 , 2024
Kallakurichi poisoning case: CBI investigation is not barred..! Tamil Nadu government dismissed the petition..! Supreme Court action..!

You May Like