பெரியார் பற்றிய கருத்துகளுக்கு வாக்கினை மாற்றி போட வைக்கும் சக்தி கிடையாது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரகுமாரின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. சந்திரகுமார் 63,984 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 13,945 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதனால் திமுக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திமுகவின் இந்த வெற்றி குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசுகையில், “ஈரோடு இடைத்தேர்தலில் ஏராளமானோர் வாக்களிக்கவில்லை. வாக்கு சதவிகிதம் குறைந்துள்ளது. அதேபோல் நோட்டாவுக்கான வாக்குகள் அதிகரிக்கும். ஈரோட்டில் நோட்டாவுக்கு கிடைத்துள்ள வாக்குகள் அதிகம்தான். வாக்கு வங்கி இங்கு போனதா, அங்கு போனதா என்று சொல்வதை விடவும் மக்களே உற்சாகமாக பங்கேற்காத தேர்தலாக பார்க்கிறோம்.
திமுகவின் வெற்றி எழுதப்பட்ட ஒன்று தான். பெரியாரை புகழ்ந்து பேசினால் ஓட்டு கிடைக்குமா? பெரியாரை தாக்கி பேசினால் வாக்குகள் மாற்றமடைந்து அதிகரிக்குமா என்று கிடையாது. அந்த காலம் மாறிவிட்டது. பெரியாரை பிடித்தவர்களும் இருக்கிறார்கள். பிடிக்காதவர்களும் இருக்கிறார்கள். அதற்காக வாக்கினை மாற்றி போடும் அளவுக்கு சக்தி இருக்கா என்று கேட்டால், நிச்சயம் கிடையாது.
பெரியார் தொடர்புடைய வாதம் கொஞ்சம் கூடுதலாக சென்றுவிட்டதோ என தோன்றுகிறது. அதனால் பெரியாரை பற்றிய கருத்துகளுக்கு வாக்கினை மாற்றி போட வைக்கும் சக்தி கிடையாது. தற்போது, திமுகவுக்கு கிடைத்துள்ள வாக்கு சதவிகிதம், பெரியாரை எதிர்த்து பேசியதால் கிடைத்தது என்று போன்ற வாதத்தை யாரும் ஏற்க மாட்டார்கள்” என்று தெரிவித்தார்.
Read More : ஆட்சியை இழந்த ஆம் ஆத்மி..!! ஒரு ஆவணங்கள் கூட மிஸ் ஆகக்கூடாது..!! டெல்லி தலைமைச் செயலகத்திற்கு சீல்..!!