fbpx

”பிள்ளைகள் போல் வளர்த்தோம்”..!! வீடு வீடாக சென்று கிளிகளை பறிமுதல் செய்த வனத்துறை..!! அதிர்ச்சியில் பொதுமக்கள்..!!

தமிழ்நாடு வனவிலங்குகள் பாதுகாப்பு திருத்தச் சட்டம் 2022 இன் படி கிளிகள் பாதுகாக்கப்பட்ட பறவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மீறினால் வன விலங்கு (பாதுகாப்பு) சட்டம் 1972, (திருத்திய சட்டம் 2022)-ன் வைத்திருப்பதும், வளர்ப்பதும், விற்பனை செய்வதும் தண்டணைக்குரிய குற்றம் என அறிவித்துள்ளது.

இந்நிலையில், மதுரை மாநகர் செல்லூர் மற்றும் மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் வீடுகளில் நூற்றுக்கணக்கான கிளிகள் வளர்க்கப்படுவதாகவும், அதற்கு அதனுடைய உடல்வாகுக்கு ஒவ்வாத உணவுகள் வழங்கப்பட்டு வருவதாகவும், கிளிகளை வளர்ப்பவர் கிளிகளின் இறக்கைகளை வெட்டுதல் கிளிகளை காயப்படுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் வனத்துறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து செல்லூர் மருதுபாண்டியர் நகர் பகுதியில் வனத்துறை அதிகாரிகள் வீடு வீடாக சென்று கிளிகள் வளர்க்கப்படுகிறதா? என்பது குறித்து அதிரடி சோதனை நடத்தினர். மேலும், வீடுகளில் வளர்க்கப்பட்ட கிளிகளை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என மைக் மூலமாக விழிப்புணர்வும் ஏற்படுத்தினர். இதையடுத்து, அங்குள்ள ஏராளமான பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வளர்த்த கிளிகளை கூண்டுடன் வந்து வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அப்போது பல மாதங்களாக வளர்த்து வந்த கிளியை தங்களது குடும்ப உறுப்பினர்கள் போன்று வளர்த்ததன் காரணமாக கண்ணீர் விட்டு கதறி அழுதபடி வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

இதனைத் தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள், ஒவ்வொரு தெருக்களிலும் நீதிபதியாகச் சென்று கிளிகளை வளர்க்கக்கூடாது பாதுகாக்கப்பட்ட பறவையினம் எனக் கூறி மைக் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு ஒவ்வொரு பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினர். 20-க்கும் மேற்பட்ட கிளிகளை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுபோன்று வீட்டில் கிளி வளர்ப்பு செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வனத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிளிகள் வளர்க்கும் பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து ஜூலை 17ஆம் தேதிக்குள் கிளிகளை வனத்துறையிடம் ஒப்படைக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதனையும் மீறி கிளிகளை வீடுகளில் வளர்க்கும் பட்சத்தில் வன உயிரினங்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பேசிய பொதுமக்கள் தெருநாய்களை பிடிப்பதை விட்டுவிட்டு பிள்ளைகள் போல வளர்க்கும் கிளிகளை பிடிப்பதா? என வேதனை தெரிவித்தனர்.

Chella

Next Post

கூண்டோடு விலகிய நிர்வாகிகள்..!! லண்டனுக்கு குடியேறும் துரை வைகோ..? காணாமல் போகிறதா மதிமுக..? வெளியான அதிர்ச்சி தகவல்..!!

Fri Jul 7 , 2023
மதிமுகவின் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் மார்கோனியை கடந்த திங்கட்கிழமை அன்று அப்பொறுப்பிலிருந்து அதிரடியாக நீக்கினார் பொதுச்செயலாளர் வைகோ. இச்சம்பவம் அக்கட்சியில் மட்டும் இன்றி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மயிலாடுதுறை மதிமுக முன்னாள் மாவட்ட செயலாளரான மார்கோனி தொடர்ந்து 30 ஆண்டு காலத்திற்கும் மேலாக அக்கட்சியில் சிறப்பாக பணியாற்றி, பல்வேறு பதவிகள் வகித்து வந்தார். அதன் தொடர்ச்சியாக மாநில இளைஞரணி செயலாளராகவும் உயர்ந்து சமீபத்தில்தான் அவருடைய கடுமையான உழைப்பை அடுத்து […]
கூண்டோடு விலகிய நிர்வாகிகள்..!! லண்டனுக்கு குடியேறும் துரை வைகோ..? காணாமல் போகிறதா மதிமுக..? வெளியான அதிர்ச்சி தகவல்..!!

You May Like