கணவர் கண்முன்னே வடமாநில பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனம் ஒன்றில், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 24 வயது இளம்பெண், தனது கணவருடன் வேலைபார்த்து வந்துள்ளார். இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில், இங்கு பணியாற்றுவது பிடிக்காததால், மீண்டும் தங்களது சொந்த ஊரான ஒடிசாவுக்கே செல்ல முடிவு செய்துள்ளனர்.
இதற்காக கணவன், மனைவி மற்றும் குழந்தை மூவரும் ரயில் ஏறுவதற்காக திருப்பூர் ரயில் நிலையம் செல்ல முயன்றுள்ளனர். அப்போது, பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தபோது, 3 இளைஞர்கள் அந்த பெண்ணுக்கு அறிமுகமாகியுள்ளனர். அந்த 3 பேரும் பீகார் மாநிலத்தை சேர்ந்த நதீம், டானிஷ், முர்சித் ஆகியோர் என்பது தெரியவந்தது. பின்னர், அந்த பெண்ணுக்கு வேலை வாங்கித் தருவதாக கூறியுள்ளனர்.
இதை நம்பி, அந்த பெண்ணுடன் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் அந்த இளைஞர்களோடு ஒரு வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு சென்றதும், இது எங்களுடைய ரூம் தான்.. நீங்கள் இங்கு தங்கிக்கொள்ளலாம் என்று கூறியுள்ளனர். இதையடுத்து, 6 பேரும் ஒரே ரூமில் தங்கியுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக அந்த 3 இளைஞர்களும் அந்த பெண்ணின் கணவரை கட்டிப் போட்டு கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.
கணவன் மற்றும் குழந்தையின் கண் முன்னே இந்த சம்பவம் நடந்ததால், அந்தப் பெண் மனமுடைந்து போனார். இதனைத் தொடர்ந்து, அந்த கொடூர நபர்களிடம் இருந்து தப்பித்த அவர்கள், நடந்த சம்பவத்தை கூறி திருப்பூர் வடக்கு காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில், 3 இளைஞர்களையும் பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதால், 3 பேரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
Read More : ’மும்மொழி வேண்டாம் என கூறுபவர்கள் பெயரில் தனியார் பள்ளிகள்’..!! விஜய், திருமாவை அட்டாக் செய்த அண்ணாமலை..!!