கள்ளச்சாராய நிகழ்வை நியாயப்படுத்த விரும்பவில்லை என அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 39 பேர் உயிரிழந்த நிலையில், அவர்களின் குடும்பத்தினருக்கு அமைச்சர் எ.வ.வேலு நேரில் சென்று ஆறுதல் கூறினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கள்ளச்சாராய நிகழ்வை நாங்கள் நியாயப்படுத்த விரும்பவில்லை. இந்த சம்பவம் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. அதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டோர்களின் உயிரை காப்பாற்றுவதற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. சட்டம்- ஒழுங்கு குறித்து வாரந்தோறும் காவல் அதிகாரிகள், ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசிக்கிறார்.
இந்த விவகாரத்தில் அரசு சீரிய வேகத்தில் நடவடிக்கை எடுத்து வருகிறது. காவல்துறை அதிகாரிகள் மீது தவறு இருப்பதன் காரணமாகவே மாவட்ட எஸ்பி உள்ளிட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று விளக்கம் அளித்தார்.
Read More : புதிதாக யாருக்கெல்லாம் ரூ.1,000 உரிமைத்தொகை கிடைக்கும்..? வெளியான சூப்பர் குட் நியூஸ்..!!