இந்தியாவில் புல்லட் ரயில் கொண்டு வருவதை விட நிதி ஒதுக்கி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் தொழில்நுட்பத்தை கொண்டு வரவேண்டியது தான் முக்கியம் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். தருமபுரியில் கடந்த 15 நாட்களாக கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெற்றது. பல அணிகள் கலந்து கொண்ட இந்த தொடரின் இறுதிப்போட்டியை அன்புமணி ராமதாஸ் கிரிக்கெட் விளையாடி தொடங்கி வைத்தார். போட்டி முடிந்த பிறகு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கினார். அதன் பின்னர் பேசிய அவர் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு தான் மின்கட்டணத்தை உயர்த்தினர். இந்நிலையில் மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்தப் போவதாக கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.
மேலும் தாம்பரம் பகுதியில் 77 மது பார்கள் சட்டவிரோதமாக செயல்பட்டுள்ளது. இது காவல் துறையினருக்கு தெரியாமல் நடந்திருக்காது எனவும் அன்புமணி கூறினார். மேலும் இந்தியாவில் புல்லட் ரயில் கொண்டு வருவதை விட நிதி ஒதுக்கி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் தொழில்நுட்பத்தை தான் முதலில் கொண்டு வர வேண்டும். அது தான் அவசியம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.