பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. நிக்சனும் ஐஷூவும் கண்ணாடி வழியாக முத்தமிட்டுக் கொண்ட அந்தக் காட்சி ஐஷூவின் பெற்றோரை ரொம்பவே வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. இதையடுத்து அவர்கள் இருவரும் நேரடியாகவே பிக்பாஸ் வீட்டிற்கு சென்று தம் பிள்ளையை வெளியே விடுமாறு கேட்டு இருந்தனர்.
எனினும், ‘எமர்ஜென்சியான காரணம் இல்லாமல் இப்படி திடீர்னு இங்க வந்து ஒரு போட்டியாளரைக் கூட்டிட்டுப் போக முடியாது. அதனால நீங்க கிளம்புங்க. நாங்க அவங்ககிட்டப் பேசறோம்னு’ சேனல் தரப்புல அவர்களை சமாதானப்படுத்தியதாக கூறப்படுகிறது. இவ்வாறான நிலையில், பிக்பாஸ் வீட்டில் ஐஷூவை பார்த்த தாயார் அவருக்காக பதிவொன்றை பகிர்ந்துள்ளார்.
அதன்படி குறித்த பதிவில், ”எல்லாத்தையும் உணர்ந்து நீ நீயாகவே இரு ஐஷூ. இந்த ஐஷூ வேண்டாம், நாங்கள் எங்களுடைய ஐஷூவை பார்க்க விரும்புகிறோம். உண்மையான கண்கள் எது, உண்மையான பொய் எது என நீ உணர்வாய் என நம்புகிறேன்” என பதிவிட்டுள்ளார்.