fbpx

‘யாரிடம் கேட்டாலும் எங்களுக்கு பட்டம் கிடைத்தது.. வேலை கிடைக்கவில்லை என்கிறார்கள்’..!! போட்டுத் தாக்கிய ராகுல்..!!

மத்தியப்பிரதேச மாநிலம் நீமச் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில், ”சில நாட்களுக்கு முன், பிரதமர் மோடி வந்து, மத்தியப் பிரதேசத்தில் 500 தொழிற்சாலைகளை அமைத்துள்ளோம் என்று கூறியிருந்தார்.
யாராவது பார்த்தீர்களா? சத்தீஸ்கரில் நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் நாட்டிலேயே நெல்லுக்கு அதிக விலை கொடுத்தோம். காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதியால் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் பயனடைந்தனர்.

மத்திய பிரதேசத்தில் எங்கள் ஆட்சி வந்த பிறகு ஜாதிவாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவோம். சில நாட்களுக்கு முன்பு சத்தீஸ்கர் விவசாயிகளை சந்தித்தேன். உங்கள் நிலத்தின் மதிப்பு என்னவென்று கேட்டேன். அவருடைய நிலத்தின் மதிப்பு அவருக்குத் தெரியாது. காரணம் கேட்டபோது அவர் சொன்னார். பாஜக ஆட்சி இருந்தபோது கடனில் இருந்த நான், எப்போது தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்தேன்.

ஆனால், காங்கிரஸ் அரசு எங்கள் கடனை தள்ளுபடி செய்ததால் நெல்லுக்கு நல்ல பணம் கிடைக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், நிலத்தை ஏன் விற்க வேண்டும். நான் நிலத்தை விற்க விரும்பவில்லை என்றார். அதேசமயம் மத்திய பிரதேசத்தில் எந்த இளைஞர்களிடம் கேட்டாலும், எங்களுக்குப் பட்டம் கிடைத்தது. ஆனால், வேலை இல்லை என்கிறார்கள். இது தான் நிலைமை” என்று பேசினார்.

Chella

Next Post

அடுத்த 3 மணி நேரம்..!! 8 மாவட்டங்களில் வெளுத்து வாங்க காத்திருக்கும் மழை..!!

Mon Nov 13 , 2023
தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்றும், நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 14ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி […]

You May Like