fbpx

’எங்களுக்கு இந்த கட்சியில மரியாதையும் இல்ல அங்கீகாரமும் இல்ல’..!! ’எனக்கு இனி வேண்டாம்’..!! அதிரடியாக விலகிய NTK நிர்வாகி..!!

நாம் தமிழர் கட்சியின் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் சுகுமார் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பில் இருந்து வருகிறேன். நாம் தமிழர் கட்சியில் என்னால் முடிந்த வரை அனைத்து[ கட்சி பணிகளும் சிறப்பாக செய்தேன். 2 நாடாளுமன்றத் தேர்தல், 2 சட்டமன்றத் தேர்தல், ஒரு உள்ளாட்சித் தேர்தல் என அனைத்து தேர்தலிலும் நான் சிறப்பாக வேலை செய்தேன்.

மாவட்டத்தின் சிறந்த தொகுதியாக செயல்பட்டு வந்தோம் இது நாள் வரை நாம் செய்த செயல்கள் உடல் உழைப்பு மற்றும் பண விரயம் இவை எவையும் சீமான், பொருட்படுத்தும் படி இல்லை. இது அனைத்து பொறுப்பாளருக்கும் சமம். அண்ணன் (சீமான்) கூறியது:- இந்த தொகுதியில் உள்ள எவருக்கும் நான் பதில் சொல்ல முடியாது. நீங்கள் என்னிடம் எந்த கேள்வியும் கேட்ககூடாது. நீங்கள் இருந்தால் இருங்கள், இல்லாவிட்டால் கிளம்புங்கள் என்று கூறினார்.

ஒன்றுக்கு இருமுறை பேசியும் நான் செய்வதுதான் செய்வேன் நீங்கள் இருந்தால் இருங்கள் இவ்வாவிட்டால் கிளம்புங்கள் என்று கூறியதன் பேரில், அண்ணா நாங்கள் உங்களிடம் கேட்டது பணமே பொருளோ அல்ல.. எங்களுக்கான மரியாதை, அங்கீகாரம் தான். அதை உங்களால் தர முடியவில்லை. எனவே, மன வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றேன். நாம் தமிழர் கட்சியில் இருந்து அனைத்து பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து விலகுகிறேன். இதுநாள் வரை என்னுடன் பணியாற்றிய அனைத்து பொறுப்பாளர்களுக்கும் மற்றும் உறவுகளுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்” என்று தெரிவித்துள்ளார்.

Read More : புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை..!! மீண்டும் குறையுமா..? முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்குமா..?

English Summary

Nam Tamil Party’s Villupuram North District Secretary Sukumar has announced his resignation from the party.

Chella

Next Post

ஒரே நாள் தான்..!! மொத்தமும் போச்சு..!! ரூ.6 லட்சம் கோடியாம்..!! கடும் சரிவை சந்தித்த பங்குச்சந்தை..!!

Thu Oct 3 , 2024
The news that the stock market has fallen by about 1000 points due to the Israel-Iran war has caused a great shock to the investors.

You May Like