fbpx

”குடிகார புருஷன்கிட்ட வாழ்றதுக்கு நம்மளே வாழ்ந்துட்டு போய்டலாம்”..!! சிவன் கோயிலில் திருமணம் செய்து கொண்ட பெண்கள்..!!

சிவன் கோயிலில் இரண்டு பெண்கள் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்ட சம்பவம் அங்கிருந்த பக்தர்கள் அதிர்ச்சியடைந்த வைத்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் தியோரியா நகரில் சிவன் கோவில் ஒன்றில், இரண்டு மனைவிகள் திருமணம் செய்து கொண்டனர். கவிதா மற்றும் பப்லு ஆகிய இருவரும் சிவன் கோயிலுக்கு வந்து மாலை மாற்றிக் கொண்டு திருமணம் செய்தனர். இதனைப் பார்த்து கோயிலுக்கு வந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த திருமணம் குறித்து குஞ்சா என்கிற பப்லு பெண் கூறுகையில், ”நாங்கள் இருவரும் இன்ஸ்டாகிராம் மூலமாக பழகினோம். நாளடைவில் செல்போன் எண்ணை பரிமாறிக் கொண்டு மணிக்கணக்கில் பேசி வந்தோம். அவரவர்களின் குடும்ப கதையை பேசிக்கொண்டோம். இதில், இருவரது கணவர்களுமே குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் என்பது தெரியவந்தது.

குடித்துவிட்டு இரண்டு பெண்களின் கணவர்களுமே தகராறு செய்து வந்தனர். இதனால், தாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தோம். அதன்படி, தற்போது சிவன் கோயிலில் மாலை மாற்றிக்கொண்டு திருமணமும் செய்து கொண்டோம் என்று கூறினார். மேலும், எங்களது கணவர்களின் துன்புறுத்தலில் இருந்து விலகி நாங்கள் இருவரும் அமைதி மற்றும் அன்பான வாழ்க்கையை மேற்கொள்ள முடிவு செய்திருக்கிறோம். ஒரு தம்பதியாக கோரக்பூரில் வசிக்க போகிறோம் என்றார்.

மேலும், நாங்கள் இருவரும் குடும்பம் நடத்துவதற்காக வேலைக்கு செல்ல முடிவு செய்துள்ளோம் என்று குஞ்சா தெரிவித்துள்ளார். இந்த திருமணம் பற்றி கோவில் பூசாரி உமா சங்கர் பாண்டே கூறுகையில், “அந்த இரண்டு பெண்களும் மாலைகளை வாங்கிக் கொண்டு வந்து, திருமண சடங்குகளை செய்தனர். பின்னர், அமைதியான முறையில், திருமணம் செய்து கொண்டு சென்றுவிட்டனர்” என்று தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தால் இரண்டு பெண்களின் கணவர்கள் மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உள்ளனர்.

Read More : மக்களே இதை யாரும் பயன்படுத்தாதீங்க..!! மிளகாய் தூளில் பூச்சி மருந்து கலப்பு..!! திருப்பிக் கொடுத்தால் பணம் கிடைக்கும்..!! பதஞ்சலி நிறுவனம் அறிவிப்பு

English Summary

The incident of two women exchanging garlands and getting married at a Shiva temple has shocked the devotees present there.

Chella

Next Post

ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்களுக்கு கோவிட் உருவாகும் அபாயம் 31 சதவீதம் அதிகம்..!! - ஆய்வில் தகவல்

Sat Jan 25 , 2025
Study says women have 31 per cent higher risk of developing long COVID compared to men

You May Like