fbpx

திமுக வெற்றி கூட்டணி.! சீட் முடிவான பின்பு தொகுதி குறித்து பேச்சு வார்த்தை.! பத்திரிகையாளர் சந்திப்பில் துரை வைகோ தகவல்!

2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலை முன்னிட்டு மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை வீழ்த்துவதற்காக காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் இணைந்து இந்தியா என்ற மெகா கூட்டணியை உருவாக்கியது.

சில மாநிலங்களில் இந்தக் கூட்டணியில் மோதல் போக்கு நீடித்தாலும் தமிழகத்தில் இந்தியா கூட்டணி ஒற்றுமையுடன் இருக்கிறது. மேலும் இந்தக் கூட்டணிக்கான வெற்றி வாய்ப்பும் தமிழ்நாட்டில் அதிகமாக உள்ளது. இந்நிலையில் திமுக அதன் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

திமுக மற்றும் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் மதிமுக கட்சியும் திமுக உடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வைகோவின் மகன் துரை வைகோ பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு 3 தொகுதிகள் கேட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

விரைவிலேயே பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு கிடைக்கும் என கூறிய அவர் எத்தனை இடங்களில் போட்டியிடுகிறோம் என்பது முடிவான பின்பு போட்டியிட வேண்டிய தொகுதிகள் குறித்து திமுகவுடன் ஆலோசித்து முடிவெடுப்போம் என தெரிவித்துள்ளார். மேலும் அதிமுக தொண்டர்கள் பம்பரம் சின்னத்தில் போட்டியிட விரும்புவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். இது குறித்தும் திமுகவுடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

English Summary: MDMK will discuss with dmk regarding parliament seats. Once the count is fixed then we will discuss about the constituency to contest durai vaiko told reporters.

Next Post

NTK Seeman | நாடாளுமன்ற தேர்தல்..!! முதல் ஆளாக முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் சீமான்..!!

Tue Feb 20 , 2024
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது. NTK Seeman | நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சுவார்த்தைகளை நடத்துவதிலும், பிரச்சார வியூகங்களை வகுப்பதிலும் மற்ற கட்சிகள் கவனம் செலுத்தி வரும் நிலையில், முதல் ஆளாக பாய்ந்து வந்து தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ளார். தற்போது அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்திலும், கூட்டணிப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டு வருகின்றன. தமிழ்நாட்டை பொறுத்தவரை, […]

You May Like