fbpx

“2026ஆம் ஆண்டு தமிழகத்தில் பாமக தலைமையில் ஆட்சி”… ஈகோ இல்லாமல் ஆளுநர் மற்றும் தமிழக முதல்வர் செயல்பட வேண்டும் – அன்புமணி ராமதாஸ்.

பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ், 2026 ஆம் ஆண்டு பாமக தலைமையில் நாங்கள் ஆட்சி அமைப்போம், அதற்கான யூகங்களை 2024 ஆம் ஆண்டு அமைப்போம் என்று கூறினார்.

தென்னக ரயில்வே மேலாளர் அலுவலகத்தில் தமிழக ரயில்வே திட்டங்கள் தொடர்பாக தென்னக ரயில்வே மேலாளர் ஆர்.என்.சிங்-ஐ நேரில் சந்தித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள ரயில் திட்டம் குறித்து ரயில்வே மேலாளர் இடம் கோரிக்கை வைத்திருக்கிறேன் என்றும், தர்மபுரி மொரக்கூர் ரயில் திட்டம், திண்டிவனம் நகரி ரயில் இணைப்பு, திண்டிவனம் திருவண்ணாமலை ரயில் திட்டம், சென்னை மகாபலிபுரம் கடலூர் பாண்டிச்சேரி இணைப்பு திட்டம், ஈரோடு பழனி இணைப்பு திட்டம், மதுரை தூத்துக்குடி இணைப்பு திட்டம், உள்ளிட்ட திட்டங்கள் குறித்து பேசினோம். மேலும் இந்த ஆண்டு நிதி போதுமான அளவிற்கு தமிழகத்திற்கு வந்துள்ளது என்று ரயில்வே மேலாளர் தெரிவித்திருக்கிறார் எனக் கூறினார்.

மேலும் பேசிய அவர் சில ரயில் திட்டங்கள் 13 ஆண்டுகள் நிறைவடைந்தும் முன்னேற்றம் ஏற்பாடவில்லை என்றும் தர்மபுரி-மொரப்பூர் ரயில்வே திட்டம் என்பது 70 ஆண்டுகள் மக்களின் கனவு திட்டம். இதுவரை 19 வரை அதிகாரிகளும் அமைச்சரையும் சந்தித்த இந்த திட்டம் குறித்து பேசி இருக்கிறேன் என்று கூறிய அவர் இந்த திட்டம் தொடங்கி வைத்த பின்னும் இத்தனை ஆண்டுகளாகியும் இன்னும் சரியான அளவில் தொடங்கப்படவில்லை எனவும் இன்னும் நிலத்தை கையகப்படுத்தி கொண்டு தான் இருக்கிறார்கள். மத்திய ரயில்வே துறை அமைச்சரை சந்தித்து தமிழகத்தில் நிலுவையில் உள்ள மற்ற திட்டங்களை பற்றி பேச உள்ளதாகவும், சில ஆண்டுகளுக்கு முன்பு ரயில்வே துறையில் பணம் வராது என்று கண்ணோட்டத்தில் தான் பார்த்தார்கள் தற்போது மக்களை சார்ந்து கண்ணோட்டங்களை பார்க்கிறார்கள் அது மகிழ்ச்சி அளிப்பதாகவும், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் ரயில்களில் செல்வார்கள் நஷட்டம் ஏற்பட்டாலும் அரசாங்கம் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் ஏழை மக்கள் சார்ந்த கண்ணோட்டத்தில் ரயில்வே துறையை இயக்க வேண்டும் வேண்டுகோள் விடுத்தார்.

பிரதமர் கிசான் திட்டம் கிட்டதட்ட 2019 ஆம் ஆண்டில் இருந்து விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6 ஆயிரம் ரூபாய் அனுப்பி வைக்கும் திட்டம். இது ஒரு ஆண்டுக்கு 2000 என்ற மூன்று தொகையாக வழங்கப்படும் திட்டம் இது, ஐந்து ஏக்கருக்கு குறைவான விவசாயிகளுக்கு அந்த கணக்கில் இந்த திட்ட மூலம், முதலில் 90 விழுக்காடு விவசாயிகளுக்கு பணம் அனுப்பப்பட்டுள்ளது கடந்த ஆண்டு 50 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது தற்போது 30 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது என்பது வேதனை அளிக்கிறது. 11 கோடியே 80 லட்சம் விவசாயிகளில் இருந்து மூன்று கோடியே 80 லட்சம் விவசாயிகளுக்கு தான் பணம் செல்கிறது அதை மத்திய அரசு அதிகப்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

தற்போது வடகிழக்கு பருவ மழை உச்சத்தில் உள்ளது சென்னை மாநகரில் செய்து வந்த மழை நீர் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று கடந்த ஆறு ஏழு மாதங்களாக பாமக சார்பில் அறிவுறுத்தப்பட்டது, இன்னும் அதற்கான பணிகள் முடியவில்லை, பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மழை வந்தாலே அதை ஒரு சில பேர் சாபமாக பார்க்கிறோம் அதை வரமாக நாம் பார்க்க வேண்டும். அடுத்து பத்து பதினைந்து ஆண்டுகளில் மழை குறைந்துவிடும் என்று தான் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். இருக்கக்கூடிய மழையை நாம் சேமிக்க வேண்டும் என்றும் சென்னையில் சுற்றி உள்ள ஸ்ரீபெரும்புதூர் மதுராந்தகம் மகாபலிபுரம் போன்ற 10 இடங்களில் புதிய ஏரியை தமிழக அரசு உருவாக்க வேண்டும். தமிழக அரசின் நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும், ஆறுகளில் தடுப்பணைகளை கட்ட வேண்டும் புதியதாக ஏரிகளை உருவாக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மேலும் பேசிய அவர் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தான் இரண்டு கட்சிகளும் திட்டமிடுகிறார்கள். 30-40 ஆண்டுகளுக்கு திட்டமிடுவதில்லை. சென்னைக்கு இரண்டாம் விமான நிலையம் அவசியம் இது தொடர்பாக பாமக ஆறு முறை அறிக்கை அனுப்பி உள்ளதாகவும், திருப்போரூர் அருகே ஐயாயிரம் ஏக்கர் தரிசு நிலங்கள் உள்ளது. ஆனால் அதற்கு அருகில் கல்பாக்கம் உள்ளது என்று காரணத்தை சொல்வதாகவும் கூறினார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் அந்த மாநிலத்தில் உள்ள இட ஒதுக்கீட்டை 81 சதவீதம் விழுக்காடாக உயர்த்த அந்த மாநில முதல்வர் திட்டமிட்டுள்ளார் அதில் குறிப்பாக பழங்குடியின மக்களுக்கு 32 விழுக்காடு தர முடிவு செய்துள்ளது அதை பாமக வரவேற்பதாகவும், தமிழகத்தில் பிராமணர், ரெட்டியார், நாயுடு நாடார் முதலியார் வெள்ளாளக் கவுண்டர் தேவர் தாழ்த்தப்பட்டவர்கள் என்ன சமுதாயத்தில் உள்ளவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இட ஒதுக்கீட்டை கொடுங்கள் இதைத்தான் தந்தை பெரியார் கூறினார் என்றும் தெரிவித்தார்.

ஆன்லைன் சூதாட்டம் குறித்து பேசி அன்புமணி ராமதாஸ் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் ஆன்லைன் சூதாட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது ஆன்லைன் சூதாட்டத்தை மறுபடியும் பலர் விளையாட ஆரம்பித்துள்ளனர். ஆன்லைன் ரம்மி விளையாட்டு விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் சட்ட முன் வடிவில் ஆளுநர் உடனடியாக கையெழுத்து போட்டு லட்சக்கணக்கான குடும்பங்களை காப்பாற்ற வேண்டும் என பாமக சார்பில் வேண்டுகோள் விடுப்பதாக தெரிவித்தார்.

முதல்வர் மற்றும் ஆளுநர் அரசியலமைப்புக்கு உட்பட்டவர்கள் தமிழ்நாட்டு மக்கள் நலன் சார்ந்து இருக்கிறார்கள் அவர்கள் மக்கள் நலன் சார்ந்து “ஈகோ” இல்லாமல் செயல்பட வேண்டும். எந்த ஈகோ இருந்தாலும் அதை மறந்து பேச வேண்டும், இல்லை என்றால் அது தமிழக மக்களை தான் பாதிக்கும். ஆளுநர், ஜனாதிபதி அவர்கள் நடுநிலையில் இருக்க வேண்டும், அவர்கள் அப்படி இல்லை என்பதைப் போல கேள்வி எழுந்துள்ளது என்றும் தெரிவித்தார்.

காசி தமிழ் சங்கத்திற்கான விளம்பரத்தை குறைத்து இருக்கலாம். சுற்று சூழல் மாசுபாடு குறித்து இங்கு யாரேனும் பேசுகிறார்களா என்று கேள்வி எழுப்பியதோடு தனியார் பால் விலையை குறைக்க வேண்டும், தனியார் பால் நிறுவனம் மாபியா போன்று செயல்படுகிறார்கள், மாபியாவை குறைக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

கூட்டணி குறித்து நான் தற்போது பேசவில்லை 2026 இல் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமையில் ஆட்சி அமைப்போம் என்று மட்டுமே தெரிவித்தேன் அதற்கான யூகங்களை 2024 ஆம் ஆண்டு அமைப்போம் என்று மட்டுமே கூறினேன் கூட்டணி குறித்து நான் எதுவும் பேசவில்லை எனக் கூறினார்.

பிரியா மரணம் தொடர்பான வழக்கில் தவறு யார் செய்திருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழக அரசு அவர்களது குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்க வேண்டும் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் போராட்டம் நடத்துகிறார்கள் என்பதற்காக தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க முடியாது. தவறு யாரு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Kathir

Next Post

#Job Alert..!! அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை..!! ரூ.45,000 சம்பளம்..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

Tue Nov 22 , 2022
அண்ணா பல்கலைக்கழகத்தில் இ-கவர்ன்ஸ் பிரிவில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகளைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள். பணியின் முழு விவரங்கள்… பதவியின் பெயர் பணிக்காலம் சம்பளம் System Architect 6 மாதம் ரூ.45,000/- System Analyst 6 மாதம் ரூ.35,000/- System Administrator 6 மாதம் ரூ.35,000/- Programmer Analyst 6 மாதம் ரூ.25,000/- Software Developer 6 மாதம் ரூ.20,000/- Peon cum Driver […]
பி.இ., பிடெக் மாணவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு..!! ரூ.50,000 சம்பளத்தில் வேலை..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

You May Like