fbpx

“கேரளாவில் CAA சட்டத்தை அமல்படுத்த மாட்டோம்”..!! அதிரடியாக அறிவித்தார் முதல்வர் பினராயி விஜயன்..!!

“குடியுரிமை திருத்தச் சட்டத்தை, கேரளாவில் நாங்கள் அமல்படுத்தப்பட மாட்டோம்” என்று, அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அதிரடியாக அறிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு நேற்று அமல்படுத்தியுள்ளது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த சட்டத்தை பல மாநிலங்கள், தாங்கள் அமல்படுத்த மாட்டோம் என்றும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சிஏஏ சட்டம் கேரளாவில் அமல்படுத்தப்பட மாட்டாது என்று அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், ‘நாட்டு மக்களை குழப்புவதற்காக தேர்தல் நெருங்கும் வேளையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கான விதிகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மக்களைப் பிளவுபடுத்துவதற்காகவும், வகுப்புவாத உணர்வுகளைத் தூண்டுவதற்காகவும், அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகளைக் குலைப்பதற்காகவுமே மத்திய அரசு இதைச் செய்துள்ளது. இந்த நடவடிக்கையை நாம் ஒன்றாக இணைந்து எதிர்க்க வேண்டும். பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து 31 டிசம்பர் 2014 அல்லது அதற்கு முன் இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கும் போது, அங்கிருந்து வந்த முஸ்லிம்களுக்கு குடியுரிமை கொடுக்க மறுப்பது அரசியலமைப்பை அப்பட்டமாக மீறுவதாகும்.

இது மதத்தின் அடிப்படையில் இந்திய குடியுரிமையை வரையறுப்பதற்கு சமம். மனிதநேயம், நாட்டின் மதச்சார்பின்மை மற்றும் மக்களுக்கு இது ஒரு வெளிப்படையான சவால். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய முதல் சட்டமன்றம் கேரளா. கேரளாவில் என்பிஆர் அமல்படுத்தப்படாது என்று கேரள அரசு அறிவித்தது. சிஏஏ, அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது எனக் கூறி மத்திய அரசுக்கு எதிராக உச் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இஸ்லாமிய சிறுபான்மையினரை இரண்டாம் தர குடிமக்களாகக் கருதும் குடியுரிமை திருத்தச் சட்டம் கேரளாவில் அமல்படுத்தப்பட மாட்டாது என்று கேரள அரசு பலமுறை கூறியுள்ளது. அந்த நிலைப்பாட்டை மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறோம். இந்த வகுப்புவாத மற்றும் பிளவுபடுத்தும் சட்டத்தை எதிர்ப்பதில் கேரளா ஒன்றுபட்டு நிற்கும்” என்று பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

Read More : Savings | ஆண் குழந்தைகளுக்கான சூப்பர் சேமிப்பு திட்டம்..!! வட்டி எவ்வளவு தெரியுமா..? நல்ல லாபம் கிடைக்கும்..!!

Chella

Next Post

Rameshwaram Cafe | ஆன்லைன் மூலம் ஆர்டர் பெற்ற குற்றவாளி..!! ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு வழக்கில் திடுக்கிடும் தகவல்..!!

Tue Mar 12 , 2024
பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு சம்பவத்தில் குற்றவாளி தேடப்பட்டு வரும் நிலையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபேவில் மார்ச் 1ஆம் தேதியன்று திடீரென இரண்டு குண்டுகள் வெடித்ததால் 10 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த பயங்கரவாத சம்பவம் குறித்து உடனடியாக மத்திய குற்றப்பிரிவு போலீஸார் மற்றும் தேசிய புலனாய்வு முகமை விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது. குண்டு வெடித்த பகுதியில் உள்ள சிசிடிவியை ஆய்வு […]

You May Like