fbpx

”அதிமுகவை வலுப்படுத்தி 2026இல் மக்களாட்சி அமைப்போம்..!! வி.கே.சசிகலா பரபரப்பு பேட்டி..!!

அதிமுகவை பலப்படுத்தி 2026ஆம் ஆண்டில் நிச்சயம் ஆட்சி அமைப்போம் என சசிகலா தெரிவித்துள்ளார்.

சென்னை புளியந்தோப்பு பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சசிகலா நிவாரண உதவி வழங்கினார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”அதிமுக தற்போது சரியாக இல்லை. அதிமுகவில் நிறைய மாற்றங்கள் கொண்டுவர வேண்டும். அதிமுகவை வலுப்படுத்தி 2026ஆம் ஆண்டில் மக்களாட்சி அமைக்கப் போகிறோம்.

சொத்து பிரிப்பது போல் அரசாங்கத்தை பிரித்து வைத்துள்ளனர். பெரிய பிள்ளைக்கு இது, கடைக்குட்டிக்கு இது என பிரித்து வைத்துள்ளனர். இதனால்தான் எந்த வேலைகளையும் சரிவர செய்ய முடியவில்லை. நான் சொல்வதை கேட்டு இப்போதாவது இதனை சரி செய்யுங்கள். அம்மா ஆட்சிக்காலத்தில் கோடை நாட்களிலேயே சென்னையில் உள்ள 3 கூவம் ஆறுகளையும் தூர்வாரி விடுவோம்.

ஆனால், அம்மா செய்ததை திமுக ஆட்சியில் செய்யவில்லை. ஆட்சிக்கு வந்த திமுக அரசு, கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறது. மழை வெள்ளத்தில் இருந்து மக்களைக் காக்க திமுக அரசு தவறிவிட்டது. வெள்ள காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களை ஸ்டாலின் சந்திப்பதால் எந்தப் பயனும் இல்லை” என்று குற்றம்சாட்டினார்.

Read More : தொடர்ந்து கண்ணாடி அணிவதால் தழும்புகள் ஏற்படுகிறதா..? அதை எளிமையாக நீக்க இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க..!!

English Summary

Sasikala has said that we will strengthen the AIADMK and definitely form the government in 2026.

Chella

Next Post

அடிக்கடி டீ குடிப்பவரா நீங்கள்? அப்ப உங்களுக்கு இந்த பிரச்சனை ஏற்படலாம்.. கவனமா இருங்க..

Thu Nov 28 , 2024
Drinking tea frequently can cause serious stomach problems, including diarrhea.

You May Like