தமிழகத்தில் கோடை காலம் தற்போது நிலவி வருகின்ற சூழ்நிலையில், கடந்த சில தினங்களாக வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது ஆங்காங்கே சில பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வந்தாலும் வெப்பத்தின் தாக்கம் குறைந்ததைப் போல தெரியவில்லை.
கத்தரி வெயில் என்று சொல்லப்படும் அக்னி நட்சத்திரம் நிறைவடைந்த பின்னரும் கூட வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. நேற்றைய நிலவரப்படி அதிகபட்ச வெப்பநிலை சென்னை மீனம்பாக்கத்தில் பதிவாகி இருக்கிறது சென்னை மீனம்பாக்கம் 105.8 பாரான்ஹீட்டும், திருத்தணி பகுதியில் 105.08 பாரான்ஹீட்டும், சென்னை நுங்கம்பாக்கத்தில் 104.18 பாரான்ஹீட்டும் வேலூர் பகுதியில் 104.18 பாரான்ஹீட்டும் பதிவாகி இருக்கிறது.
இந்த நிலையில், சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் வெப்பநிலை நேற்றைய விட இன்று அதிகரித்து காணப்படும் என்று தமிழக வெதர்மேன் தெரிவித்திருக்கிறார். அவர் தெரிவித்ததாவது சென்னையில் நேற்று விட வெயில் தாக்கம் அதிகமாக இருக்கும் எனவும் நேற்று மீனம்பாக்கத்தில் வெயில் அதிகமாக காணப்பட்ட நிலையில் இன்றும் அதிகபட்ச வெப்பநிலை பதிவாக வாய்ப்பு இருக்கிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் போன்ற பகுதிகளில் அதிக வெப்பநிலை பதிவாக வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.