fbpx

அமைச்சர் பதவிக்கு ஆப்பு..!! பொன்முடி வழக்கில் இன்று தண்டனை அறிவிப்பு..!! எத்தனை ஆண்டுகள் சிறை..?

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி உள்ளிட்டோருக்கான தண்டனை விவரங்கள் இன்று காலை 10.30 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிவிக்கப்படுகிறது. இந்த தண்டனையை நீதிபதி ஜெயச்சந்திரன் அறிவிக்கிறார். இந்த தீர்ப்பைத் தொடர்ந்து அமைச்சர் பதவியில் பொன்முடி நீடிப்பாரா என்பது தெரியவரும்.

1996-2001ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்தார் பொன்முடி. அப்போது வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.36 கோடிக்கு பொன்முடி சொத்து குவித்தார் என 2011இல் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதில் பொன்முடி மனைவி விசாலாட்சியும் சேர்க்கப்பட்டார். இந்த வழக்கு வேலூர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் பொன்முடி உள்ளிட்டோரை ஜூன் மாதம் விடுதலை செய்தது.

ஆனால் இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்ய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். பின்னர் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், சென்னை உயர்நீதிமன்ற கிளைக்கு மாற்றப்பட்டார். இதனால் நீதிபதி ஜெயச்சந்திரன் இந்த வழக்கை விசாரித்தார். இந்த வழக்கில் நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளிக்கையில், வருமானத்துக்கு அதிகமாக 64.09% பொன்முடி சொத்து குவித்திருப்பது உறுதியாகியுள்ளது. இந்த வழக்கில் பொன்முடி குற்றவாளி. பொன்முடி, அவரது மனைவி உள்ளிட்டோருக்கான தண்டனை விவரங்கள் டிசம்பர் 21 (இன்று) அறிவிக்கப்படும். அன்றைய தினம் இருவரும் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.

இதனையடுத்து இன்று வீடியோ கான்பரன்ஸ் அல்லது நேரில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பாக பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி உள்ளிட்டோர் ஆஜராக உள்ளனர். நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு காலை 10.30 மணிக்கு 2-வது வழக்காக வருகிறது. இந்த வழக்கில் பொன்முடிக்கு அளிக்கும் தண்டனை விவரங்கள் பெரும் எதிர்பார்ப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

பொதுவாக வழக்குகளில் மக்கள் பிரதிநிதிகளுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டால் அவர்களது எம்பி அல்லது எம்.எல்.ஏ. பதவி பறிக்கப்படும். இதனால் பொன்முடியின் அமைச்சர் பதவி பறிபோகுமா? இல்லையா? என்பது இன்று காலை 10.30 மணிக்கு தெரிந்துவிடும். ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இருந்த போதும் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடித்து வருகிறார். ஆனால், பொன்முடி வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் போது அவர் மக்கள் பிரதிநிதித்துவ சட்ட விதிகளின் படி எம்.எல்.ஏ பதவி, அமைச்சர் பதவியை உடனே இழந்துவிடுவார். அத்துடன் 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாத நிலையும் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

’Pornhub’ உள்ளிட்ட ஆபாச இணையதளங்களுக்கு புதிய கட்டுப்பாடு..!! இனி இது ரொம்ப முக்கியம்..!!

Thu Dec 21 , 2023
தற்போது அனைவரின் கைகளிலும் ஆண்ட்ராய்டு செல்போன்கள் உள்ளன. இதனால் இணையதளங்களில் மக்கள் அதிக நேரத்தை செலவிட்டு வருகின்றனர். அந்த வகையில் ஏராளமான ஆபாச இணையதளங்களும் செயல்பாட்டில் உள்ளன. Pornhub, Xvideos மற்றும் Stripchat உள்ளிட்ட ஆபாச இணையதளங்களை அதிகமானவர்கள் பார்க்கின்றனர். இதற்கிடையே தான் இந்த 3 இணையதளங்களும் சிக்கலை எதிர்கொண்டுள்ளன. அதாவது இந்த இணையதளங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் கடும் கட்டுப்பாடுகளை விதிக்க திட்டமிட்டுள்ளது. அதாவது இணையதளங்களை பயன்படுத்தும் நபர்களின் வயது […]

You May Like