பாரதப் பிரதமர் நரேந்திர மோடி 44 வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை துவக்கி வைப்பதற்காக சென்னை வந்துள்ளார். பிரதமர் மோடியை, தமிழக அரசு சார்பில் சென்னை விமான நிலையத்தில், தமிழக அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, தி.மு.க பாராளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, முன்னாள் மத்திய அமைச்சா் தயாநிதிமாறன்உள்ளிட்டோரும் தமிழக அரசு தலைமை செயலாளர் இறையன்பு, டி.ஜி.பி சைலேந்திரபாபு, சென்னை மாநகர மேயா் பிரியா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் நயினார் நாகேந்திரன் மற்றும் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
சென்னை, மகாபலிபுரத்தில் நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க நேரு உள் விளையாட்டு அரங்கம் செல்லும் பிரதமர் மோடிக்கு சதுரங்க மேடை போன்று வடிவமைக்கப்பட்டுள்ள நேப்பியர் பாலத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. வழிநெடுகிலும் காத்திருந்த பா.ஜ.க பிரமுகர்கள் மற்றும் தொண்டர்களை பார்த்து பிரதமர் மோடி மகிழ்ச்சியுடன் கையசைத்தார்.
செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவுக்கு வந்துள்ள பிரதமர் மோடி சதுரங்க கறை அச்சிடப்பட்டுள்ள வேட்டி அணிந்து வந்திருப்பது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. முன்னதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பட்டு வேஷ்டி மற்றும் சட்டையுடன் இந்த விழாவுக்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.