fbpx

களைகட்டும் மூன்றாம் கட்டத் தேர்தல்..! வாக்குச்சாவடிக்கு நடந்து சென்று வாக்களித்த பிரதமர் மோடி..!

18-வது மக்களவைக்கு ஏழு கட்ட தோ்தல் அறிவிக்கப்பட்டு, இரு கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்துள்ளது. முதல்கட்டமாக, தமிழகம், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக கேரளம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 26-ம் தேதியும் தோ்தல் நடைபெற்றது. 3-ம் கட்ட தேர்தலுக்கான வாக்கு பதிவு இன்று நடைபெற்று வருகிறது.

அசாம் மாநிலத்தில் 4, பிஹார் 5, சத்தீஸ்கர் 7, தத்ரா நகர் ஹவேலி மற்றும் டாமன் டையூ யூனியன் பிரதேசங்கள் 2, கோவா 2, குஜராத் 25,கர்நாடகா 14, மத்திய பிரதேசம் 9, மகாராஷ்டிரா 11, உத்தர பிரதேசம் 10,மேற்கு வங்கம் 4 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காஷ்மீரின் அனந்த்நாக் – ரஜோரி மக்களவை தொகுதியிலும் இன்று தேர்தல் நடக்க இருந்தது. பனிப்பொழிவு காரணமாக நெடுஞ்சாலை மூடப்பட்டதால், இத்தொகுதியில் வாக்குப்பதிவு மே 25-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள காந்தி நகர் தொகுத்திக்குட்டபட்ட ராணிப் பகுதியில் உள்ள நிஷான் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சக்காவடியில் பிரதமர் மோடி வாக்களித்தார். மக்களவை தேர்தலில் தனது ஜனநாயக கடமையை ஆற்ற காலையிலேயே பிரதமர் வாக்குச்சாவடிக்கு நடந்து சென்று வாக்களித்தார். பிரதமர் மோடியுடன் அமித்ஷா உள்ளிட்டோர் வந்துள்ளனர். இந்த காந்தி நகர் தொகுயில் பாஜக சார்பில் மத்திய அமைச்சர் அமித் ஷா போட்டியிடுகிறார்.

Kathir

Next Post

அடுத்த ஷாக்!… கோவிஷீல்ட் பக்கவிளைவுகளை மத்திய அரசு மறைக்கிறது!… மருத்துவர்கள் குற்றச்சாட்டு!

Tue May 7 , 2024
Covishield: கோவிஷீல்டு தடுப்பூசியின் பக்கவிளைவால் ஏற்படும் அரிய நோய்க்குறி பற்றி மத்திய அரசாங்கம் அறிந்திருந்தும் அதை இன்னும் நாட்டிற்கு வழங்குவதாக மருத்துவர்கள் மற்றும் ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கோவிஷீல்டு தடுப்பூசியின் பக்கவிளைவால் ஏற்படும் அரிய நோய்க்குறி பற்றி மத்திய அரசாங்கம் அறிந்திருந்தும் அதை இன்னும் நாட்டிற்கு வழங்குவதாக மருத்துவர்கள் மற்றும் ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கொரோனா குழப்பம் இன்னும் முடிந்தபாடில்லை. இப்போது கோவிஷீல்டு வடிவத்தில் மீண்டும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது. கடந்த […]

You May Like