fbpx

“வாரத்தின் முதல் நாளான இன்று..” தங்கத்தின் விலை நிலவரம்.!

நாடுகளின் பொருளாதாரம் மற்றும் பண வீக்கம் தங்கத்தின் மதிப்பை பொருத்தே கணக்கிடப்படுகிறது. இந்தியாவைப் போன்ற பெரும் மக்கள் தொகை கொண்ட நாடுகளில் பொதுமக்கள் தங்கத்தில் அதிக முதலீடு செய்கின்றனர். சாமானிய மக்கள் மட்டுமின்றி பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கும் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக தங்கம் இருக்கிறது.

நமது கலாச்சார அடிப்படையில் தங்க ஆபரணங்கள் மற்றும் அணிகலன்கள் அணிவது பண்டைய காலம் தொட்டு வழக்கத்தில் இருக்கும் ஒன்றாகும். திருமணம் போன்ற சடங்குகளிலும் தங்கம் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தங்க ஆபரணங்கள் அணிவதை பெண்கள் மிகவும் விரும்புகின்றனர். மேலும் தங்கத்தில் முதலீடு செய்வதால் தேவை ஏற்படும் காலங்களில் அவற்றை அதிக லாபத்தில் விற்று பணத்தை ஈட்டலாம்.

இத்தகைய மதிப்புமிக்க பொருளான தங்கத்தின் விலை கடந்த காலங்களில் இருந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது.
இந்தப் பதிவில் நாட்டின் முக்கிய நகரங்களில் தங்கத்தின் விலை நிலவரத்தைப் பற்றி காணலாம். தங்கம் அதன் தரத்தின் அடிப்படையில் 18 கேரட் 22 கேரட் மற்றும் 24 கேரட் என வகைப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இன்றைய ரீடைல் மார்க்கெட் நிலவரத்தின்படி சென்னையில் 18 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.4,808 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 1 சவரனுக்கு ரூ.₹38,464-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

22 கேரட் தங்கம் 1 கிராம் ரூ.5,870-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் ஒரு சவரன் விலை ரூ.46,960 ஆகும். 24 கேரட் தங்கம் 1 கிராமுக்கு ரூ.6,404-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 1 சவரன் ரூ.51,832-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மற்ற நகரங்களை விட சென்னையில் தங்கத்தின் விலை சற்று அதிகமாக இருக்கிறது. மும்பையில் 22 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்குரூ.5,810-க்கு விற்பனை செய்யப்படுகிறது. டெல்லியில் ஒரு கிராம் 22 கேரட் தங்கம் ரூ.5,825-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் இன்று 22 கேரட் தங்கத்தின் விலை நிலவரம்:

கிராம் இன்று
1 ரூ.5,870/-
8 ரூ.46,960/-

சென்னையில் இன்று 24 கேரட் தங்கத்தின் விலை நிலவரம்:

கிராம் இன்று
1 ரூ.6,404/-
8 ரூ.51,232/-

சென்னையில் இன்று 18 கேரட் தங்கத்தின் விலை நிலவரம்:

கிராம் இன்று
1 ரூ.4,803/-

8 ரூ.38,424/-

Next Post

’கடைசி விவசாயி’ படத்தில் நடித்த மூதாட்டி அடித்துக் கொலை..!! மகன் செய்த கொடூர சம்பவத்தின் பின்னணி..!!

Mon Feb 5 , 2024
விஜய்சேதுபதி நடித்த ‘கடைசி விவசாயி’ படத்தில் அவருக்கு அத்தை கதாபாத்திரத்தில் நடித்தவர் காசம்மாள் (71). மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அருகே ஆனையூரைச் சேர்ந்த இவருக்கு நமகோடி (52), தனிக்கொடி என இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களில் நமகோடி மதுவுக்கு அடிமையானவர். இவரது மனைவி பிரிந்து சென்றுவிட்ட நிலையில், நமகோடி தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். ஆனால், அடிக்கடி மது வாங்க பணம் கேட்டு தாயை தொல்லை செய்து வந்துள்ளார். இந்நிலையில், […]

You May Like