fbpx

Special Bus: வார இறுதி நாள்… இன்று முதல் 26-ம் தேதி வரை சிறப்பு பேருந்து…! முழு விவரம்…

முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கம்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; இன்று முதல் 26-ம் தேதி வரை முகூர்த்தம் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை. திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று 535 பேருந்துகளும் 25/05/2024 (சனிக்கிழமை) அன்று 595 பேருந்துகளும் கோயம்பேட்டிலிருந்து நாகை, வேளாங்கண்ணி. ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 24/05/2024 மற்றும் 25/05/2024 வெள்ளி மற்றும் சனிக் கிழமை) அன்று 130 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே, தினசரி இயக்க கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இன்று 535 பேருந்துகளும் 25/05/2024 (சனிக்கிழமை) அன்று 595 பேருந்துகளும் சென்னை கோயம்பேட்டிலிருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்று 65 பேருந்துகளும் 25/05/2024 சனிக்கிழமை அன்று 65 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

கொத்தாக சிதறிய உடல்கள்!… ரசாயன தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து!… பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு!

Fri May 24 , 2024
Chemical Factory Fire: தானே மாவட்டத்தில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 8 பேர் உயிரிழந்தனர் மற்றும் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் அமைந்துள்ள டோம்பிவிலி எம்ஐடிசி பகுதியின் 2 ஆம் கட்டத்தில் அமைந்துள்ள அமுதன் கெமிக்கல்ஸில் கொதிகலன் வெடித்து விபத்துக்குள்ளானது. விபத்து ஏற்பட்டதையடுத்து, மளமளவென தீப்பிடித்து, அருகில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் வீடுகளுக்கு பரவியது. இந்த சம்பவத்தில் 2 பெண்கள் உட்பட 8 […]

You May Like