fbpx

முக்கிய அறிவிப்பு…! வார இறுதி நாள்… பௌர்ணமி முன்னிட்டு மட்டுமே கோயம்பேட்டில் சிறப்பு பேருந்து…!

வார இறுதி நாட்கள் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு பயணிகள் சிரமமின்றி பயணிக்க வசதியாக, அரசுப் போக்குவரத்துக் கழகம் திருவண்ணாமலைக்கு சிறப்புப் பேருந்துகளை இயக்க உள்ளது.

இது தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்) மூலமாக கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு பேருந்துகள் தற்போது இயக்கப்பட்டு வருகிறது. மேற்படி தடங்களில் குறிப்பாக திருவண்ணாமலை செல்லும் பயணிகள் பெரும்பாலானவர்கள் கோயம்பேடு மார்க்கெட் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பணி செய்து வருவதால் அவர்கள் திருவண்ணாமலை தட பஸ்களை கோயம்பேடு பேருந்து நிலைத்தில் இருந்து இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

அந்த கோரிக்கையின் அடிப்படையில் 23.05.2024 முதல் திருவண்ணாமலைக்கு, சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து பஸ்கள் தினசரி இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. தற்போது அதில் மாற்றம் செய்யப்பட்டு 24.05.2024 முதல் ஒவ்வொரு வாரமும் வெள்ளி, சனி ஆகிய வார இறுதி நாட்கள் மற்றும் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமியை முன்னிட்டு சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து காஞ்சீபுரம், வந்தவாசி வழியாக இயக்கப்பட்டு வரும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளும் மற்றும் ஆற்காடு, ஆரணி வழியாக திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

வாகன ஓட்டிகளே உஷார்!… ஓட்டுநர் உரிம விதிகளில் மாற்றம்!… ஜூன் 1முதல் அமல்!… முழுவிவரம் இதோ!

Tue May 21 , 2024
Driving License: உங்கள் ஓட்டுநர் உரிமத்தைப் பெற வேண்டுமா? நீங்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறை மாற்றங்கள் குறித்து இந்த தொகுப்பில் அறிந்துகொள்ளலாம். ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான சில விதிகளில் மாற்றம் செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது.முன்னதாக, ஓட்டுநர் உரிமம் பெற ஆர்வமாக இருந்தவர்கள், அரசின் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் சோதனை நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதற்கு பதிலாக, புதிய விதிகளின் ஒரு பகுதியாக, ஓட்டுநர் உரிமம் பெற விரும்புவோர், […]

You May Like