fbpx

7 கிலோ வரை சட்டென குறையும் உடல் எடை..!! பிரபல நடிகை சொன்ன ரகசியம்..!!

பொதுவாகவே அனைத்து பெண்களும் தங்களது உடல் எடையை குறைக்க பல விதமான முயற்சிகளை செய்து பார்ப்பார்கள். சிலர் கடைகளில் விற்கப்படும் மருந்துப் பொருட்களை பயன்படுத்துவார்கள். அது ஒரு சில காலங்களில் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். அதற்காகவே பலரும் வீட்டு வைத்தியத்தை முன்னெடுக்கின்றனர். வீட்டு வைத்தியம் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது கேரள மக்களின் வீட்டு வைத்தியம் தான்.

மஞ்சள், இலவங்கப்பட்டை, இஞ்சி, கருப்பு மிளகு, ஏலக்காய் போன்ற சமையலுக்கு பயன்படுத்தப்படும் பொருட்களை வைத்து கேரளாவில் எடை இழப்புக்கு பயன்படுத்தப்படுகிறது. கொழுப்பு வளர்சிதை மாற்றத்தை ஆதரிக்கும் திறன் மற்றும் வீக்கத்தைக் குறைப்பதன் மூலம் எடை இழப்புக்கு மசாலாப் பொருட்கள் உதவும். அந்த வகையில், தமிழ் சினிமாவில் கவர்ச்சி கதாபாத்திரங்களுக்காகவே ரசிகர்களின் மனதில் இன்று வரையில் நிலைத்து நிற்கும் நடிகை சோனா கூறிய கேரளத்து மக்களின் பானம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

ஒரு கப் – தண்ணீர்

ஒரு ஸ்பூன் – கருஞ்சீரக தூள்

அரை ஸ்பூன் – சுக்கு தூள்

ஒரு சிட்டிகை – மஞ்சள் தூள்

அரை எலுமிச்சை பழ சாறு

செய்முறை

ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீரை கொதிக்க விட்டு, அதில் அரை ஸ்பூன் சுக்கு தூள், ஒரு ஸ்பூன் கருஞ்சீரக தூள், ஒரு சிட்டிகை மஞ்சள் தூளை சேர்த்து ரசம் போன்று கொதிக்க வைக்க வேண்டும். பிறகு, அது நன்றாக கொதித்தவுடன் வடிக்கட்டி அரை எலுமிச்சை பழச்சாறு சேர்த்து இரவு நேரத்தில் தூங்கச் செல்லும் முன் குடித்து வர வேண்டும். இதை தொடர்ந்து குடித்து வருவதன் மூலம் 7 கிலோ எடையை வேகமாக குறைக்கலாம் எனவும் நடிகை சோனா கூறியுள்ளார்.

Read More : அக்.15இல் தவெக மாநாடு..? சாலையோரங்களில் சுவர் விளம்பரங்கள்..!! வெளியாகும் அறிவிப்பு..?

English Summary

Turmeric, cinnamon, ginger, black pepper and cardamom are used for weight loss in Kerala.

Chella

Next Post

தமிழகமே..! இன்று மிலாது நபி கொண்டாட்டம்...! பள்ளி, பாஸ்போர்ட் அலுவலகம் விடுமுறை...!

Tue Sep 17 , 2024
Milad Nabi celebration today...! School, passport office holiday

You May Like