ஒரு விஷப் பாம்பைக் கூட நம்பலாம். அதனைச் செல்லப் பிராணியாக வளர்க்கலாம். ஆனால், பாஜகவை ஒருபோதும் நம்ப முடியாது. பாஜக நாட்டையே அழித்து வருகிறது. மத்திய புலனாய்வு அமைப்புகள், என்ஐஏ, வருமான வரித் துறை, பிஎஸ்எஃப், சிஐஎஸ்எஃப் போன்றவை பாஜகவின் கட்டளைப்படி செயல்பட்டு வருகின்றன” என்று திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி கடுமையாக சாடியுள்ளார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, 2021 சிடல்குச்சி துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்குக் காரணமானவர் இப்போது பாஜக வேட்பாளர் என்று குற்றம் சாட்டினார். வியாழனன்று கூச் பெஹாரில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசிய திரிணாமுல் காங்கிரஸ் தலைவர், “உங்களுக்கு சிதல்குச்சி சம்பவம் நினைவிருக்கிறதா…? ஐந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். நான்கு சிறுபான்மையினர் மற்றும் ஒருவர் ராஜ்பன்ஷி சமூகத்தைச் சேர்ந்தவர். யாருடைய அறிவுறுத்தலின் கீழ் இந்தப் படுகொலை நடந்ததோ அவர்தான் இப்போது பாஜக வேட்பாளர். அவர் மீது விஜிலென்ஸ் அனுமதிக்கப்படவில்லை, ஆனால் இந்திய அரசு அவருக்கு க்ளீன் சிட் வழங்கியுள்ளது” என்று மம்தா பானர்ஜி கூறினார்.
ஒரு விஷப் பாம்பைக் கூட நம்பலாம். அதனைச் செல்லப் பிராணியாக வளர்க்கலாம். ஆனால், பாஜகவை ஒருபோதும் நம்ப முடியாது. பாஜக நாட்டையே அழித்து வருகிறது. மத்திய புலனாய்வு அமைப்புகள், என்ஐஏ, வருமான வரித் துறை, பிஎஸ்எஃப், சிஐஎஸ்எஃப் போன்றவை பாஜகவின் கட்டளைப்படி செயல்பட்டு வருகின்றன என கூறினார்.