வங்கி ஊழியர்கள் 13 நாட்களுக்கு வேலைநிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கக் கூடாது, வங்கி ஊழியர்களின் பணிச்சுமையை குறைக்கும் வகையில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 4ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
மேலும், ஜனவரி 2ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வங்கி ஊழியர்கள் பங்கேற்கும் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 19, 20ஆம் தேதிகளில் அகில இந்திய வங்கி ஊழியர்கள் பங்கேற்கும் வேலைநிறுத்தப் போராட்டம் சென்னையில் நடைபெறவுள்ளது. இதன் மூலம் 13 நாட்களுக்கு தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளன. இதனால் ஏடிஎம் சேவைகள், பொதுமக்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.