fbpx

என்னது லிட்டருக்கு 28 கி.மீ. மைலேஜ் தரும் காரா?.

வாடிக்கையாளர்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லிட்டருக்கு 28 கி.மீ. மைலேஜ் தரும் மாருதி கார் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவின் வாடிக்கையாளர்கள் மத்தியில் உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது இந்த கார். காரணம் லிட்டருக்கு 28 கிலோ மீட்டர் ஓடுமாம். இதுதான் இந்த காரின் சிறப்பம்சம் இதற்காக வாடிக்கையாளர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தனர். மாருதி நிறுவனம் அறிமுகம் செய்துள்ள அந்த காரின் பெயர் சுஸுக்கி க்ராண்ட் விட்டாரா . இது மீடியம் அளவிலான எஸ்.யு.வி. ரக கார்.

இந்த கார் குறித்த தகவல்கள் வெளியான உடனே 55 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த காரை முன்பதிவு செய்துவிட்டனர். வாடிக்கயைாளர்ளை இந்த காரின் சிறப்பு அம்சங்கள் எவ்வளவு ஈர்த்துள்ளது என்பதற்கு இதுதான் எடுத்துக்காட்டு. மாருதி சுசுக்கி வெளியிட்டுள்ள இந்த காரின் மதிப்பு ரூ.10.45 லட்சம் என்பது தொடக்க விலையாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஷோரூம் விலைக்கு வரும்போது ரூ.19 . 65 லட்சத்துக்கு கிடைக்கும்.

இந்த காரின் மேலும் பல அம்சங்கள் குறித்து சி.இ.ஓ. ஹிஷாஷி டெக்குச்சி கூறுகையில் , ’’இது அனைத்து விதமான சாலைகளுக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 57000 பேர் இதுவரை முன்பதிவு செய்துள்ளார்கள். கிராண்ட் விட்டாரா பெருமளவில் வாடிக்கையாளர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. ’’ என்றார்.

Next Post

துர்கா பூஜைக்கு பக்தர்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்து: 32 பேர் பலி 60 பேர் மாயம்..!

Mon Sep 26 , 2022
வங்காளதேசம் பஞ்சகரா மாவட்டத்தில் நேற்று பக்தர்களை கோவிலுக்கு ஏற்றிச் சென்ற படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. நேற்று பிற்பகலில் துர்கா பூஜை விழாவில் பங்கேற்க ஆலியா காட்டில் இருந்து பாதேஷ்வர் கோவிலை நோக்கி பிரார்த்தனை செய்ய வந்த பக்தர்களுடன் சென்று கொண்டிருந்த படகு திடீரென கவிழ்ந்தது. எதிர்பாரத நேரத்தில் படகு கவிழ்ந்ததில் 32 பேர் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அதிக பாரம் ஏற்றிச்சென்றதால் படகு கவிழ்ந்ததாக கூறப்படுகிறது. இதனை […]

You May Like