fbpx

என்னது… 500 மி.லி ஆவின் பால் வெறும் 19 ரூபாய் தானா..? அவர்களே சொல்லிட்டார்களாம்..!! பொதுமக்கள் மகிழ்ச்சி..!!

தமிழ்நாடு முழுவதும் ஆவின் நிறுவனம் மூலம் சிவப்பு நிற பால்பாக்கெட் 500 மி.லி 34 ரூபாய்க்கும், ஆரஞ்சு நிற பால் பாக்கெட் 30 ரூபாய்க்கும், பச்சை நிற பால் பாக்கெட் 22 ரூபாய்க்கும், நீல நிற பால் பாக்கெட் 20 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையே, ஆவின் நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன் அறிமுகம் செய்த ஊதா நிற பால் பாக்கெட் 22 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. திமுகவின் தேர்தல் வாக்குறுபடி, ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டதால், வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் ஆவின் நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால், ஆவின் நிறுவனத்தின் வருமானத்தை அதிகரிப்பதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை கையில் எடுத்துள்ளது. அந்த வகையில், ஆவின் நிறுவனம் புதிய வகை பால் பாக்கெட்டை குறைந்த விலையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மிக குறைந்த கொழுப்பு சத்துள்ள பாலை தயாரித்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாகவே சென்னையில் பால் தட்டுப்பாடு நிலவி வருவதாக கூறப்படும் நிலையில், புத்தாக அறிமுகம் செய்யப்பட்ட மஞ்சள் நிற பால் பாக்கெட் 500 மி.லி. 19 ரூபாய்க்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இருமுறை சமன்படுத்தப்பட்ட பாலில் கொழுப்பு சத்து குறைவாக உள்ளதால், இதனை குடிப்பதற்கு மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளதாக ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால், சென்னை மக்களின் தேவைக்காக இந்த மஞ்சள் நிற பால் பாக்கெட் விரைவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Chella

Next Post

RN Ravi | அசைவ உணவகங்கள் மூடல்..? களத்தில் இறங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி..!! ஏன் தெரியுமா..?

Fri Aug 11 , 2023
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். ஒவ்வொரு மாத பௌர்ணமி நாட்களிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். மேலும், தீபத்திருநாளில் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுவது திருவண்ணாமலை தீபம் தான். மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும். அங்கு தீபம் ஏற்றிய பிறகுதான் பொதுமக்கள் அவர்களின் வீடுகளில் தீபம் ஏற்ற வேண்டும் என்பதும் ஐதீகம். அப்போது, அதிக அளவில் பக்தர்கள் வருவதால் திருவண்ணாமலைக்கு சிறப்பு […]

You May Like