fbpx

’அடடே என்னா அழகு’..!! பெண்கள் போல் வேடமணிந்து ஆண்கள் பங்கேற்ற திருவிழா..!! எங்கு தெரியுமா..?

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கோட்டங்குளங்கர ஸ்ரீதேவி ஆலயத்தில் பல தலைமுறைகளாக சமைய விளக்கு என்னும் திருவிழா நடைபெற்று வருகிறது. இங்கு முதலில் பெண்கள் தான் வழிபாடு செய்து வந்துள்ளனர். பின்பு அம்மனின் சக்தியை தெரிந்து கொண்டதால் ஆண்களும் – பெண்கள் போல் வேடமிட்டு வழிபாடுகள் செய்ய தொடங்கியதாகக் கூறப்படுகிறது. ஆண்டுதோறும் நடக்கும் இந்த விழாவில் இந்தியா முழுவதும் இருந்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் இந்த கோவிலுக்கு வந்து பெண்கள் போல் வேடமணிந்து சமைய விளக்கு என்னும் சடங்கை செய்து வருகின்றனர். இந்நிலையில், இந்த விழாவில் கலந்து கொண்ட ஆண்கள், பெண்கள் போல் வேடமணிந்து கொள்ளை அழகுடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இவர்களுக்கு ஆடை அலங்காரம் செய்வதற்காகவே ஏராளமான மேக்கப் கலைஞர்களும் அந்த பகுதியில் குவிந்திருந்தனர்.

வேண்டுதலுக்காக வருபவர்களும், வேண்டுதல் நிறைவேறிய பின் நேர்த்திக்கடனை செலுத்த வருபவர்கள் என பல்லாயிரக் கணக்கானோர் குவிந்தனர். இங்கு வரும் ஆண்கள், பெண்கள் போல் அழகாக அலங்காரம் செய்து கையில் விளக்குடன் கோவிலை வலம்வருவர். தன்னுடன் வரும் தனது மனைவியே தன்னை பார்த்து ஆச்சரியம் அடையும் அளவில் இவர்களின் அலங்காரம் இருக்கும். இதைப் பார்க்கும் பெண்களுக்கு ஆண்கள் மேல் மரியாதையும் அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது. பலரும் இவர்களுடன் நின்று புகைப்படங்களும் எடுத்துச் சென்றனர்.

Chella

Next Post

உயிரை பறிக்கும் 18 நிறுவனங்களின் உரிமம் ரத்து..!! மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அதிரடி..!!

Wed Mar 29 , 2023
போலி மருந்துகள் தயாரிப்பு மற்றும் விற்பனையை தடுக்கும் வகையில், கடந்த 15 நாட்களாக நாடு முழுவதும் 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். மத்திய, மாநில அரசுகளின் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அதிகாரிகள் முதற்கட்டமாக 76 மருந்து உற்பத்தி நிறுவனங்களில் இந்த ஆய்வை மேற்கொண்டனர். இந்த ஆய்வு முடிவில் போலி மற்றும் கலப்பட மருந்துகள் தயாரித்தது தெரியவந்ததை அடுத்து 18 நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து […]

You May Like