fbpx

பட்டா சிட்டா ஆவணங்கள் எதற்காக பயன்படுகிறது? ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

பட்டா என்பது ஒரு நிலத்துக்காக வருவாய்த் துறை வழங்கும் பதிவு ஆவணம் ஆகும். சிட்டா என்பது சொத்து அமைந்துள்ள பகுதி,  அளவு, உரிமையாளர் முதலான விவரங்களை உள்ளடக்கிய ஆவணம் ஆகும். கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து இந்த இரு ஆவணங்களும் இணைக்கப்பட்டு, பட்டா சார்ந்த தகவல்கள் அனைத்தும் ஓரே ஆவணத்தில் கிடைக்க வழிவகை செய்யப்பட்டது.  குடிமக்கள் தங்களது சிட்டா பட்டா, அடங்கல் சான்றிதழ்களை இப்போது ஆன்லைன் மூலமாகவும் பார்க்க முடியும்.

பட்டா சிட்டா ஆவணம் எதற்காக தேவைப்படுகிறது?

* ஒரு விவசாய நிலத்தினையோ, காலி இடத்தையோ அல்லது கட்டிடத்துடன் கூடிய இடத்தை விற்பனை செய்யவோ அல்லது வாங்குவதற்கோ பட்டா சிட்டா கண்டிப்பாக தேவைப்படுகிறது.

* பட்டா சிட்டாவை வைத்தே ஒரு நிலத்தை வாங்கவோ விற்பனை செய்யவோ முடியும். தமிழ் நாட்டில் நில உடைமைக்கான ஆவணமாக பட்டா சிட்டா உள்ளது.

* வங்கிகள் மூலம் சொத்தின் பேரில் கடன் பெறுவதற்கு பட்டா சிட்டா ஆவணம் தேவைப்படுகிறது.

* விவசாயம் நிலம் மற்றும் விவசாயாம் செய்து இயற்கை அழிவுகளால் பாதிப்பு அடைந்தாலோ, நிலத்தினை அரசு உபயோகத்திற்காக எடுத்துக்கொண்டாலோ அதற்கான இழப்பீட்டுத்தொகை பெறுவதற்கு பட்டா சிட்டா ஆவணம் முக்கியமான ஆவணமாக தேவைப்படுகிறது.

* நிலத்தின் மீது நில உரிமையாளரின் சட்ட பூர்வ உரிமையை நிரூபிக்க பட்டா சிட்டா முக்கிய ஆவணமாக இருக்கிறது. க

  • * கட்டிடங்கள் போன்ற ஆக்கிரமிப்பை நிறுவி அவற்றை நிரூபிக்க எளிதாக இருக்கலாம். ஆனால் காலி நிலத்தையோ அல்லது விவசாய நிலத்தை அப்படி செய்ய முடியாது.

ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? தமிழ்நாடு அரசின் இணையதளத்தில் இருந்து பட்டா சிட்டா நில சர்வே விவரங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான வழிகாட்டுதல்கள்

Step 1 : பட்டா சிட்டா ஆன்லைன் பெற வேண்டிய அரசின் அதிகாரபூர்வ வலைதளம்  https://eservices.tn.gov.in/eservicesnew/index.html

Step 2 : பட்டா & புலப்படம் / சிட்டா / நகர நில அளவைப் பதிவேடு விவரங்களை பார்வையிடுவதற்கான ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள்.

Step 3 : இப்போது தோன்றும் பக்கத்தில் கீழ்கண்ட தேர்வுகளை பூர்த்திசெய்யவும் .

அதில் 1) மாவட்டம், 2) வட்டம் ,  3) கிராமம் 4) பட்டா /சிட்டா விவரங்களை பார்வையிட 5) அங்கீகார மதிப்பை உள்ளிடவும்,    6) செல்போன் நம்பர் பதிவு செய்யவேண்டும், பின்னர் அதற்க்கு ஒடிபி OTP வரும், அதனை உறுதிப்படுத்த வேண்டும், இவை அனைத்தயும் பூர்த்தி செய்து சமர்பிக்க வேண்டும். 

Step 4 : பின்னர் உங்களது உள்ளீடு தரவுகள் இயக்கப்பட்டு அதற்கான சிட்டா தோன்றும். சிட்டா சான்றினை சரி பார்த்தபின்னர் அதன் கீழ் உள்ள “Print” பொத்தானை அழுத்தவும். இப்பொழுது சிட்டவை PDF தரவாக சேமிக்கலாம் அல்லது அச்சிட்டு கொள்ளலாம்.

Read more ; அந்த ப்ளாட்டில் எனக்கும் பங்கு உண்டு.. நாக சைதன்யாவிற்கு நோட்டீஸ் அனுப்பிய சமந்தா..!!

English Summary

What are Patta Chitta documents used for? How to apply online?

Next Post

தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனத்தில் வேலை.. 10-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!!

Sun Nov 3 , 2024
Tamil Nadu Cement Company (TANCEM) has published a notification to fill the post of Assistant.

You May Like