fbpx

சிறுநீரக கல் பிரச்சனை ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன..? அதை எப்படி தடுப்பது..?

பொதுவாக நம்மிள் பலருக்கு இருக்கும் நோய்களில் ஒன்று தான் சிறுநீரக கல். இந்த பிரச்சனையால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்திருப்பார்கள். சில மரபியல் காரணங்கள், மோசமான உணவு பழக்கங்கள், நீரிழிவு நோய், கீழ்வாதம் போன்ற காரணங்களால் சிறுநீரக கல் பிரச்சனை ஏற்படுகிறது. அந்த வகையில், சிறுநீரக கல் பிரச்சனை ஏற்படுவதற்கான காரணங்கள் என்னென்ன என்பதை தற்போது பார்க்கலாம்.

* உடலில் போதுமான அளவு தண்ணீர் இல்லாமல் இருந்தால், சிறுநீரக கற்கள் ஏற்படலாம். எனவே, தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். குறிப்பாக, ஆண்கள் தண்ணீர் குடிக்க வேண்டும்.

* சிலர் பேக் செய்யப்பட்ட உணவுகள், உப்பு, சோடியம் அதிகம் உள்ள உணவுகளை விரும்பி சாப்பிடுவார்கள். இது நாளடைவில் அவர்களுக்கு சிறுநீரக கல் பிரச்சனையை ஏற்படுத்தும். எப்போதாவது வெளியில் சாப்பிடுங்கள். ஆனால், அதையே பழக்கமாக வைத்து கொள்ளாதீர்கள்.

* அசைவ பிரியர்கள் பெரும்பாலும் இறைச்சி வகைகள் தான் விரும்பி சாப்பிடுவார்கள். இறைச்சியில் புரதச்சத்து அதிகம் இருக்கிறது. இதனை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால், சிறுநீரக கல் பிரச்சனை வரும்.

* சிறுநீரக கல் உருவாவதை தடுக்க நினைப்பவர்கள் அடிக்கடி உணவுடன் கால்சியம் சத்து நிறைந்த உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். அதனை ஒரு நாளைக்கு 2-3 முறை சாப்பிட வேண்டும்.

* சாக்லேட், டீ, காஃபி, ஆல்கஹால் மற்றும் நட்ஸ்கள் ஆகியவற்றை அளவுக்கு அதிகமாக சாப்பிடக் கூடாது என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஏனென்றால், இதுவும் சிறுநீரக கல் பிரச்சனையைஉண்டாக்கும்.

Read More : ”FIR வெளியானதற்கு நாங்கள் பொறுப்பல்ல”..!! மாணவி வழக்கில் அறிக்கை தாக்கல் செய்தது காவல்துறை..!!

    English Summary

    Let’s now look at the causes of kidney stone problems.

    Chella

    Next Post

    சர்க்கரை நோயாளிகள் இந்த அறிகுறிகளை புறக்கணிக்கக்கூடாது.. சிறுநீரக நோய் இருக்குன்னு அர்த்தம்..

    Sat Dec 28 , 2024
    Some symptoms in diabetic patients may indicate kidney damage. Let's see what these symptoms are.

    You May Like