fbpx

உள்துறை அமைச்சரிடம் எடப்பாடி பழனிசாமி பேசிய முக்கிய விஷயங்கள் என்னென்ன? பரபரப்பு பேட்டி

”நான் டெல்லிக்கு சென்று உட்கட்சி விவகாரம் குறித்து பேசியதாக கூறுவது, தவறானது” என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

டெல்லி சென்று திரும்பிய அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”உள்துறை அமைச்சரை டெல்லியில் சந்தித்து அவரிடத்தில் முக்கியமான சில விஷயங்களை பேசினோம். அதில் கோதாவரி – காவரி இணைப்பு திட்டம் விரைந்து செயல்படுத்த வேண்டும், நடந்தாய் வாழி காவிரி திட்டத்தையும் செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் போதை பொருள் அனைத்து பகுதியிலும் தடையில்லாமல் கிடைக்கிறது. இது தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம்.

உள்துறை அமைச்சரிடம் எடப்பாடி பழனிசாமி பேசிய முக்கிய விஷயங்கள் என்னென்ன? பரபரப்பு பேட்டி

திமுகவிலிருந்து முக்கிய தலைவர்கள் ஒவ்வொருவரும் விலகுவது தான் திராவிட மாடல். ஆ.ராசா கீழ்தராமாக, இந்து மதத்தை புண்படுத்தும் விதமாக பேசுவது கண்டிக்கத்தக்கது. ஆ.ராசா குறிப்பிட்டு பேசிய அந்த வார்த்தை அவரது கட்சி தலைவரின் குடும்பத்துக்கு பொருந்துமா? அல்லது அவரது மருமகன் திருச்செந்தூரில் யாகம் நடத்தினாரே அவருக்கும் பொருந்துமா? என்று கேட்டேன். இன்னும் அவரது கட்சி தலைவர் உரிய பதிலளிக்கவிக்லை என்று தெரிவித்தார். மேலும், அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்த கேள்விக்கு, நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. நீதிமன்ற தீர்ப்பு வரும் போது நீங்களே தெரிந்து கொள்வீர்கள். நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் போது அதை பற்றி பேசினால் அது வழக்கிற்கு தடையாக இருக்கும்.

உள்துறை அமைச்சரிடம் எடப்பாடி பழனிசாமி பேசிய முக்கிய விஷயங்கள் என்னென்ன? பரபரப்பு பேட்டி

மேலும், நான் டெல்லிக்கு சென்று உட்கட்சி விவாகரம் குறித்து பேசியதாக கூறுவது, தவறானது. விடியா திமுக ஆட்சியில் எதும் நடைபெறாமல் இருப்பது குறித்தும், பல்வேறு கோரிக்கைகளை வைக்கதான் டெல்லி சென்றோம். தமிழகத்தில் காய்ச்சல் பரவலைக் தடுக்க இந்த அரசு விழிப்போடு இருக்க வேண்டும். மருத்துவக்குழு உரிய முறையில் ஆராய்ந்து காய்ச்சல் பரவலைக் தடுக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்”. இவ்வாறு அவர் பேசினார்.

Chella

Next Post

இனி கிரெடிட் கார்டு மூலமும் UPI முறையில் பணம் செலுத்தலாம்.. புதிய வசதி அறிமுகம்..

Wed Sep 21 , 2022
ஆன்லைனில் பணம் செலுத்துவதற்கும் பிற டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கும் UPI ஐப் பயன்படுத்தும் மில்லியன் கணக்கான மக்களுக்கு ஒரு குட்நியூஸ் வந்துள்ளது. ஆம்… QR குறியீட்டை ஸ்கேன் செய்து UPI மூலம் பணம் செலுத்த RuPay கிரெடிட் கார்டுகளை இப்போது பயன்படுத்தலாம். இனி, RuPay கிரெடிட் கார்டைப் பயன்படுத்துபவர்கள் தங்கள் கார்டை ஸ்வைப் செய்யாமலேயே Pos இயந்திரங்களில் வசதியாக பணம் செலுத்த முடியும். இந்த வசதியை ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த […]

You May Like