fbpx

வருமான வரி அடுக்கில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய மாற்றங்கள் என்னென்ன? முழு விவரம்…

2023-24ம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் வருமான வரி செலுத்துவதற்கான அடுக்கில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய மத்திய அரசின் கடைசி முழு பட்ஜெட் என்பதால், மத்திய தர மக்களுக்கு பட்ஜெட்டில் வருமான வரித் தொடர்பான சலுகைகள் நிச்சயம் இடம் பெறும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அதை மெய்ப்பிக்கும் விதமாக 2023-24ம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் வருமான வரி உச்ச வரம்பை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உயர்த்தி அறிவித்துள்ளார். மேலும், வருமான வரி செலுத்துவதற்கான அடுக்கில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி ரூ.3 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்திற்கு வரி செலுத்த வேண்டியதில்லை. ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் ரூபாய் வரையிலான ஆண்டு வருமானத்திற்கு 5% வரி விதிக்கப்படும். ரூ.6 லட்சம் முதல் ரூ.9 லட்சம் வருமானத்திற்கு 10%, ரூ.9 முதல் ரூ.12 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 15%, ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரையில் 20% வரி செலுத்த வேண்டும். ரூ.15 லட்சத்திற்கு மேலான வருமானத்திற்கு 30% வரி செலுத்த வேண்டும்.

உச்சபட்ச உப வரிகள் குறைப்பு – தனிநபர் வருமானத்திற்கு உப வரிகள் உள்ளிட்ட கூடுதல் வரிகளுடன் சேர்த்து உச்சபட்ச வரியாக 42.74% வரி வசூலிக்கப்படுகிறது. உலகிலேயே இது அதிகம் என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். எனவே, சர்சார்ஜ் எனப்படும் உப வரி விகிதத்தை 37% இல் இருந்து 25% குறைத்து புதிய பட்ஜெட்டில் அறிவித்துள்ளது. இதன் மூலம் அதிகபட்ச தனிநபர் வருமான வரி குறைகிறது. மேலும், புதிய வரிவிதிப்பில் தனிநபர் வருவமான வரிகழிவுகளுடன் கூடிய வருமான வரிவிலக்கு உச்சவரம்பு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

புதிய வரி விதிப்பின் விவரம்:

வருமானம்20222023சேமிப்பு
7 லட்சம்33,800033,800
8 லட்சம்46,00035,00011,600
9 லட்சம்62,40045,00017,400
10 லட்சம்78,00060,00018,000
11 லட்சம்1,19,60090,00026,900
12 லட்சம்1,95,0001,50,00045,000

ஆண்டுக்கு 9 லட்சம் வருமான பெறுகிறவர்கள் ரூ.45,000 வரி செலுத்தினால் போதுமானது, நடப்பில் உள்ள தனிநபர் அடிப்படை வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kokila

Next Post

மாணவர்களே கவனம்...! இன்று மாலைக்குள் இதை சமர்ப்பிக்க வேண்டும்...! இல்லை என்றால் தேர்வு எழுத முடியாது...!

Thu Feb 2 , 2023
நடைபெறவிருக்கும்‌ மார்ச்‌/ஏப்ரல்‌ 2023,இடைநிலை, மேல்நிலை முதலாம்‌ ஆண்டு / இரண்டாம்‌ ஆண்டு பொதுத்‌ தேர்வெழுத ஆன்‌லைன்‌ வழியாக விண்ணப்பிப்பதற்கு 1-ம் தேதி வரையிலான நாட்களில்‌ காலை 10.00 மணி முதல்‌ மாலை 5 மணி வரை மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்க சேவை மையங்களுக்கு நேரில்‌ சென்று விண்ணப்பிக்க வேண்டும்‌. விண்ணப்பிக்கத்‌ தவறும்‌ தேர்வர்கள்‌, சிறப்பு அனுமதித்‌ திட்டத்தில்‌ 05 முதல்‌ 07-ம் தேதி வரையிலான நாட்களில்‌ […]

You May Like