fbpx

இது என்னடா புது ரூல்ஸா இருக்கு!… வாடகைக்கு வீடு கேட்ட நபர்!…12ம் வகுப்பு மார்க் கம்மியா இருக்கு!… வைராகும் வாட்ஸ் அப் பதிவு!

பெங்களூரில் வாடகைக்கு வீடு கேட்ட நபரிடம் 12ம் வகுப்பு மார்க் கம்மியாக உள்ளது என்று வீட்டு உரிமையாளர் பேசிய வாடஸ் அப் ச்சேட் இணையத்தில் வைரலாகியுள்ளது.

பெங்களூரில் வாடகைக்கு வீடு பார்த்துக்கொண்டிருக்கும் ஒருவரிடம் வீட்டு உரிமையாளர் பேசிய வாடஸ் அப் ச்சேட் இணையத்தில் வைரலாகியுள்ளது. ஐடி நிறுவனங்கள் அதிகம் இருக்கும் பெங்களூரில் அனைத்து மாநில இளைஞர்களும் தங்கி பணியாற்றி வருகின்றனர். சிலர் பி.ஜி. அல்லது ஹாஸ்டெல்களில் தங்கி பணியாற்றி வருகின்றனர். மேலும் சிலர் வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர். அந்த வகையில் வாடகைக்கு வீடு பார்த்துக்கொண்டிருந்த ஒருவரிடம் வீட்டி உரிமையாளர் பேசிய ச்சேட் இணையத்தில் வைரலாகியுள்ளது.

முன்னதாக யோகேஷ் என்பவர் வீடு வாடகைக்கு தேடி வந்த நிலையில் ஆன்லைன் வாயிலாக வீடு வாடகைக்கு இருப்பதை அறிந்து அவரை வாட்ஸ் அப் மூலம் தொடர்புக்கொண்டுள்ளார். அப்போது வீட்டின் உரிமையாளர், யோகேஸிடம் ஆதார், நிறுவனத்தில் வழங்கிய கடிதம், பான் கார்டு, 10 மற்றும் 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் 150 முதல் 120 வரிகளுக்குள் சுயவிவர குறிப்பு எழுதி அனுப்புமாறு தெரிவித்துள்ளார்.

வீட்டு உரிமையாளர் கேட்ட அனைத்தையும் கொடுத்த யோகேஸுக்கு வீட்டு உரிமையாளர் வீடு கொடுக்க மறுத்துள்ளார். இதுத்தொடர்பான வாட்ஸ் அப் சேட்டில், ஹாய் யோகேஷ், நான் உங்கள் ஆவணத்தையும் புரோபைலையும் பார்த்தேன். 12ம் வகுப்பில் 90% மதிப்பெண்கள் இருக்க வேண்டும். நீங்கள் 75% மதிப்பெண் பெற்றதால் உங்களுக்கு வீடு கிடையாது என்று தெரிவித்துள்ளது. இது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Kokila

Next Post

பீரியட் செக்ஸ் விரும்புபவர்களா நீங்கள்?... நம்பமுடியாத மாற்றங்களும்! நன்மைகளும்!... சில டிப்ஸ் தெரிந்துகொள்ளுங்கள்!

Sat Apr 29 , 2023
மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொள்வதால், உடலில் நம்ப முடியாத மாற்றங்கள் நடக்கும். மேலும் இந்த சமயத்தில் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம். மாதவிடாய் பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் நிகழும். இந்த நேரத்தில் வெறும் ரத்தப்போக்கு மட்டுமில்லாமல் வயிற்று வலி, வயிற்று பிடிப்புகள், பலவீனம், மனநிலை மாற்றங்கள் ஆகியவை ஏற்படும். சானிட்டரி நாப்கின்கள் இரத்தப்போக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தினாலும், சில பெண்களுக்கும், ஆண்களுக்கும் மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொள்ள ஆசை இருக்கும். இப்படி […]

You May Like