fbpx

தைராய்டு அறிகுறிகள் என்ன? சிகிச்சை முறைகள் என்னென்ன? விரிவாக!!

தைராய்டு சுரப்பியின் அளவு மிகவும் பெரிதாவதால் தொண்டையின் முன்பக்கத்தில் உண்டாகும் வீக்கம் goitre எனப்படுகிறது. இந்த அறிகுறிகள் என்ன என்பதை தற்போது பார்க்கலாம்.

கழுத்தின் முன்பகுதியில், தொண்டையின் நடுப்பகுதிக்கு சற்று கீழே அமைந்துள்ள முக்கிய நாளமில்லா சுரப்பி தைராய்டு ஆகும். இந்த சுரப்பி பட்டாம்பூச்சி வடிவில் இருக்கும். நம்முடைய வளர்சிதை மாற்ற வேகத்தை சிறப்பாக வைப்பது தைராய்டு ஹார்மோனின் முக்கிய வேலையாக இருக்கிறது. உடலின் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குப்படுத்தும் ஹார்மோன்கள் தைராய்டு சுரப்பி மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதே போல தைராய்டு சுரப்பியானது நம் சுவாசம், இதய துடிப்பு, செரிமானம் மற்றும் உடல் வெப்பநிலையை பாதிக்கும் ஹார்மோன்களையும் உருவாக்குகிறது.

தைராய்டு சுரப்பியானது அதிகமாக ஹார்மோன்களை உற்பத்தி செய்தாலோ அல்லது போதுமான அளவு ஹார்மோன்களை சுரக்காமல் இருந்தாலோ அது நமக்குள் எரிச்சல், சோர்வு, எடையில் திடீர் மாற்றங்கள் என பல அறிகுறிகளையும்,பிரச்சனைகளையும் ஏற்படுத்தும். தைராய்டு சுரபி சரியாக வேலை செய்யாததால் ஏற்படும் நான்கு நிலைகள் ஹைப்போ தைராய்டிசம், ஹைப்பர் தைராய்டிசம், goitre மற்றும் தைராய்டு நோட்யூல்ஸ் ( thyroid nodules) என குறிப்பிடப்படுகின்றன.

ஹைப்போ தைராய்டிசம் :

தைராய்டு ஹார்மோனின் அளவு சீராக இருக்க வேண்டும். ஆனால் ஒருவருடைய தைராய்டு சுரப்பி செயலற்றதாக இருந்து போதுமான அளவு ஹார்மோன்களை உற்பத்தி செய்யவில்லை என்றால் அது ஹைப்போ தைராய்டிசம் என்ற நிலையாக குறிப்பிடப்படுகிறது. இந்த நிலை சில உடல் செயல்முறைகளில் மந்தநிலையை ஏற்படுத்தலாம். பொதுவாக ஹைப்போ தைராய்டிசம் நிலையானது கர்ப்பம், முதுமை, நீரிழிவு நோய், மருந்துகள் எடுப்பது அல்லது ஒரு தன்னுடல் தாக்க நோய், தைராய்டு சுரப்பியை அகற்றிய ஆப்ரேஷன் அல்லது கதிர்வீச்சு சிகிச்சையால் ஏற்படும் சேதம் போன்ற காரணங்களால் ஏற்படும் ஹார்மோன்ஸ் சமநிலையின்மையால் பெரும்பாலும் ஏற்படுகிறது.

ஹைப்பர் தைராய்டிசம்:

உடலின் தேவையை காட்டிலும் தைராய்டு சுரப்பியானது அதிகமாக செயல்பட்டு அதிக அளவு தைராய்டு ஹார்மோனை உற்பத்தி செய்யும் நிலை ஹைப்பர் தைராய்டிசம் நிலை என குறிப்பிடப்படுகிறது. ஹைப்பர் தைராய்டிசம் நிலைக்கு மிகவும் பொதுவான காரணமாக Graves நோய் ஆகும். கிரேவ்ஸ் நோய் என்பது ஒரு தன்னுடல் தாக்கக் கோளாறாக இருக்கிறது. இது ஒருவரின் நோயெதிர்ப்பு அமைப்பு தைராய்டு சுரப்பியைத் தாக்கும் நிலையாகும். ஹைப்பர் தைராய்டிசம் கொண்டவர்களில் சுமார் 70% பேர் Graves’ disease-ஆல் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள். இதை தவிர thyroid nodules (Toxic nodular goitre அல்லது Multinodular goitre என்றும் குறிப்பிடப்படுகிறது), தைராய்டு சுரப்பி அதிக ஹார்மோன்களை உற்பத்தி செய்ய காரணமாக இருக்கலாம். தைராய்டு பிரச்சனைகளின் ஆரம்ப அறிகுறிகள் தைராய்டு ஹார்மோன்கள் அதிகமாக இருக்கிறதா அல்லது குறைவாக சுரக்கிறதா என்பதைப் பொறுத்து மாறுபட்டாலும் சில பொதுவான அறிகுறிகள் இருக்கின்றன.

தைராய்டு அறிகுறிகள் என்னென்ன?

1)உடல் எடை திடீரென அதிகரிப்பது அல்லது குறைவது என எடையில் எதிர்பாராத மாற்றங்கள்

2)அடிக்கடி கவலை உணர்வு அல்லது சோகம் உணர்வு ஏற்படுவது அல்லது மூட் ஸ்விங்ஸ் எனப்படும் மனநிலை மாற்றங்கள்

3)அதிகமான தூக்க அல்லது மந்த உணர்வு மற்றும் தூக்கத்தில் தொந்தரவு

4)முடி உதிர்வு அல்லது வறண்ட சருமம்

5)மூட்டுகளில் அசௌகரியம் மற்றும் தசை பலவீனம்

6)இதயம் திடீரென வேகமாக அல்லது மெதுவாக துடிப்பது

7)பெண்களில் மாதவிடாய் சுழற்சியில் ஏற்படும் அசாதாரணங்கள் அல்லது மாற்றங்கள்

Read More: பல லட்சம் கோடி மதிப்புள்ள சொத்துக்களை தன் வசமாக்கிய அரசர் சார்லஸ்!! சுவாரஸ்ய தகவல் இங்கே!!

Baskar

Next Post

219 பேர் பலி!... மணிப்பூர் கொடூர வன்முறை!… முக்கிய குற்றவாளி கைது!… NIA அதிரடி!

Fri Jun 7 , 2024
Manipur Violence: மணிப்பூர் வன்முறையை அதிகரிக்கவும், வடகிழக்கு மாநிலங்களில் பயங்கரத்தை பரப்பவும் கிளர்ச்சியாளர்கள் மற்றும் பயங்கரவாத கும்பல்களின் நாடுகடத்த சதி தொடர்பான வழக்கில் முக்கிய குற்றவாளி ஒருவரை இம்பால் விமான நிலையத்தில் இருந்து தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) நேற்று கைது செய்தது. மணிப்பூர் மாநிலத்தின் சேனாபதி மாவட்டத்தில் கடந்த ஆண்டு மே 4-ம் தேதி பழங்குடியின பெண்கள் இருவரை, மைத்தேயி இனத்தைச் சேர்ந்தவர்கள் ஆடையின்றி ஊர்வலமாக அழைத்து சென்ற […]

You May Like