fbpx

’என்னடா இப்படியெல்லாம் பண்றீங்க’..!! புது மனைவியை வெறொருவருக்கு விற்ற கணவன்..!! அதிர்ச்சி சம்பவம்..!!

தன்னுடைய மனைவியை வேறொரு நபருக்கு கணவரே விற்ற அதிர்ச்சி சம்பவம் ஒடிசாவில் அரங்கேறியிருக்கிறது.

ஒடிசா மாநிலம் கலஹண்டி மாவட்டத்தில் உள்ள நார்லா பகுதியைச் சேர்ந்தவர் கிரா பெருக் (வயது 25). இவர் சமீபத்தில்தான் பூர்ணிமா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், கிரா பெருக் தனது மனைவி பூர்ணிமாவை அழைத்துக்கொண்டு வேலை தேடி செல்வதாகக் கூறி டெல்லிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வேறொரு நபருக்கு மனைவி பூர்ணிமாவை, பணத்திற்காக விற்றுள்ளார் கீரா பெருக். அவரிடம் இருந்து பெரும் தொகையை வாங்கிக் கொண்டு பறந்து விட்டார்.

’என்னடா இப்படியெல்லாம் பண்றீங்க’..!! புது மனைவியை வெறொருவருக்கு விற்ற கணவன்..!! அதிர்ச்சி சம்பவம்..!!

இதனால், அதிர்ச்சியடைந்த பூர்ணிமா தனது உறவினர்களுக்கு தொடர்பு கொண்டு நடந்த சம்பவம் குறித்து கண்ணீர் மல்க தகவல் கொடுத்துள்ளார். உடனடியாக பெண்ணின் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி கீரா பெருக்கை கைது செய்து சிறையில் அடைத்தனர். விற்கப்பட்ட பெண் தனது தந்தைக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து உண்மை சம்பவம் அம்பலமாகி உள்ளது.

Chella

Next Post

#Covid: 24 மணி நேரத்தில் நோய் தொற்றால் 547 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர்...!

Mon Nov 14 , 2022
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 547 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை ஒன்றாக பதிவாகியுள்ளன. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 1,003 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் மொத்த விவரங்கள்.. நாட்டில் மொத்தம் […]

You May Like