தமிழர் வடிவமைத்த ரூபாய் சின்னத்தை திமுக அரசு மாற்றியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.
2024-25ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நாளை (மார்ச் 14) தாக்கல் செய்யப்படுகிறது. அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த பட்ஜெட் திமுக அரசின் கடைசி பட்ஜெட். இந்நிலையில் இன்று, அரசின் மாநில திட்டக்குழு தயாரித்த பொருளாதார ஆய்வறிக்கையை முதலமைச்சர் முக.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். பொருளாதார ஆய்வு அறிக்கையை தமிழ்நாடு அரசு வெளியிடுவது இதுவே முதல் முறையாகும்.
இந்நிலையில், நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட உள்ள நிலையில், அதற்கான இலச்சினை முதலமைச்சர் முக.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அதில் இந்திய ரூபாய் குறியீட்டிற்கு (₹) பதிலாக ’ரூ’ என்பதை பயன்படுத்தியுள்ளார். கடந்த பட்ஜெட்டில் ₹ பயன்படுத்தப்பட்டது. தற்போது, மும்மொழி விவகாரம் தமிழ்நாட்டில் சூடுபிடித்துள்ள நிலையில், ₹ என்ற குறியீட்டை தவிர்த்து, தமிழ் எழுத்தான ’ரூ’ இந்த பட்ஜெட்டில் பயன்படுத்தப்பட்டுள்ளது கவனித்தக்கது.
The DMK Government's State Budget for 2025-26 replaces the Rupee Symbol designed by a Tamilian, which was adopted by the whole of Bharat and incorporated into our Currency.
— K.Annamalai (@annamalai_k) March 13, 2025
Thiru Udhay Kumar, who designed the symbol, is the son of a former DMK MLA.
How stupid can you become,… pic.twitter.com/t3ZyaVmxmq
இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “தமிழர் வடிவமைத்த ரூபாய் சின்னத்தை திமுக அரசு மாற்றியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். 2025-26ஆம் ஆண்டுக்கான திமுக அரசின் பட்ஜெட், ஒரு தமிழரால் வடிவமைக்கப்பட்ட ரூபாய் சின்னத்தை மாற்றியுள்ளதாக கூறியுள்ளார். இது முழு இந்தியாவாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு நமது நாணயத்தில் இணைக்கப்பட்டது. இந்த சின்னத்தை வடிவமைத்தவர் திமுக முன்னாள் எம்.எல்.ஏவின் மகன் உதயகுமார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீங்கள் எவ்வளவு முட்டாளாக முடியும்?” என பதிவிட்டுள்ளார்.