சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால், உலகளவில் பெருநிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், ஆல்பபெட் 12,000 ஊழியர்களை வேலையில் இருந்து கூகுள் நிறுவனம் நீக்கப்போவதாக கடந்த ஜனவரி மாதம் அறிவித்தது. இதையடுத்து, கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி இந்தியாவில் 450 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது.
இந்நிலையில், ஐதராபத்தைச் சேர்ந்த ஹர்ஷ் விஜய்வர்கியா கூகுள் நிறுவனத்தில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவர் தனது லிங்க்ட்இன் பக்கத்தில் பணிநீக்கம் செய்யப்பட்டது குறித்து பதிவொன்றை எழுதியுள்ளார். அவர் எழுதிய பதிவில், நான் சிறந்த ஊழியர் விருதை வென்றுள்ளேன். எனினும் என்னை ஏன் பணிநீக்கம் செய்தார்கள் என்று புரியவில்லை. 12,000 ஊழியர்களில் நானும் ஒருவனாக பாதிக்கப்பட்டுள்ளேன். இருப்பினும் நான் ஏன் பணிநீக்கம் செய்யப்பட்டேன் என்று தெரியவில்லை’ என்று எழுதியுள்ளார். இவரைப் போன்றே பல்வேறு ஊழியர்கள் உருக்கமான பதிவுகளை எழுதி வருகின்றனர்.