fbpx

”அடுத்து வருவது கொரோனாவை விட பயங்கரமானது”..!! எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம்..!!

‘எல் நினோ’ எனும் காலநிலை மாற்றம் காரணமாக டெங்கு, ஜிகா மற்றும் சிக்குன்குனியா போன்ற பாதிப்புகள் அதிகரிக்கலாம்.. கொரோனாவை விட பயங்கரமான வைரஸ்கள் நம்மை தாக்கலாம் என உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் டெட்ரோஸ் அதானம் கேப்ரியேசஸ் எச்சரித்துள்ளார்.

’எல் நினோ’ பாதிப்புகள் குறித்து நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம், ”2023 மற்றும் 2024ஆம் ஆண்டு எல் நினோ நிகழ்வுகளால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள உலக சுகாதார அமைப்பு தயாராகி வருகிறது. எல் நினோ எனப்படும் காலநிலை மாற்றத்தால் டெங்கு மற்றும் ஜிகா மற்றும் சிக்குன்குனியா போன்ற பிற வைரஸ்களை அதிகரிக்கக்கூடும்.

மேலும், காலநிலை மாற்றத்தின் விளைவுகளும், கொசுக்களின் இனப்பெருக்கமும் இந்த நோய்களின் பரவலைத் தூண்டுகின்றன. இந்த கால நிலை மாற்றத்தால் விவசாயம் பாதிக்கப்பட்டு, பொருளாதார சிக்கல் ஏற்படும்” என்று எச்சரித்தார்.

Chella

Next Post

ஜூலை மாதம் 15 நாட்கள் வங்கி விடுமுறை!... முழு விவரம் இதோ!

Mon Jun 26 , 2023
ரிசர்வ் வங்கி ஜூலை 2023-ல் வங்கி விடுமுறைகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. ஜூலையில் 15 நாட்கள் விடுமுறை இருக்கும். இருப்பினும், எந்த பகுதியில் வங்கி விடுமுறை உள்ளது என்பது உள்ளூர் நிகழ்வைப் பொறுத்தது. ஜூலை 2023-ல் இரண்டாவது மற்றும் நான்காவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் உட்பட சுமார் 15 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும். வெவ்வேறு மண்டலங்களில் வெவ்வேறு நாட்களில் இந்த வங்கி விடுமுறைகள் மாறுபடும். ஜூலை 1 வங்கி விடுமுறை, ஜூலை […]

You May Like