fbpx

”எல்லா தேர்தல்களிலும் அடி வாங்கும் உனக்கு தளபதியை பற்றி கூற என்ன தகுதி இருக்கு”.? மன்னிப்பு கேள்..!! சீமானுக்கு எதிராக தவெக போஸ்டர்..!!

நடிகர் விஜய் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் பேசியதற்கு கண்டனம் தெரிவித்து விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் வைரலாகியுள்ளது.

தமிழக அரசியலில் களமிறங்கியுள்ள விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி விக்கிரவாண்டியில் வெற்றிகரமாக மாநாட்டை நடத்தி முடித்துள்ளார். அதுநாள் வரை விஜய்யின் அரசியல் வருகைக்கு ஆதரவு தெரிவித்து வந்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், பின்னர் விஜய்யின் கொள்கை வேறு, தங்கள் கொள்கை வேறு என கூறினார்.

இதைத்தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் கூட்டம் ஒன்றில் பேசிய சீமான், விஜய்யையும், தவெக-வையும் கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சமூக வலைதளங்களில் தவெக, நாதக தொண்டர்களிடையே வாக்குவாதம் எழுந்துள்ளது. இந்நிலையில், சீமானை கண்டித்து மதுரை வடக்கு மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

அதில், எல்லா தேர்தல்களிலும் அடி வாங்கும் உனக்கு தளபதியை பற்றி கூற என்ன தகுதி இருக்கு.? சீமானை அரசியலின் செல்லாக்காசு என குறிப்பிட்டு விமர்சித்துள்ள அவர்கள் விஜய்யிடம் சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். மேலும், இது எச்சரிக்கை அல்ல.. கட்டளை என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 2026 சட்டமன்ற தேர்தல் உதயநிதி Vs விஜய் என்று இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், தற்போது சீமான் vs விஜய் மோதல் நடந்து வருவது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More : ”2026இல் மீண்டும் எம்ஜிஆர் ஆட்சி”..!! ”திமுகவின் குடும்ப ஆட்சி அகற்றப்படும்”..!! தவெக அதிரடி..!!

English Summary

A poster of Vijay’s fans has gone viral condemning the Naam Tamilar Party coordinator’s speech about actor Vijay.

Chella

Next Post

நெல்லையில் மீண்டும் அதிர்ச்சி..!! பட்டியலின சிறுவனை பீர் பாட்டிலால் கொடூரமாக தாக்கிய இளைஞர்கள்..!! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..!!

Tue Nov 5 , 2024
The incident in Nellai where a boy who knocked down passers-by by hitting a car, broke into a house and attacked him with a sickle and a beer bottle has created a lot of excitement in the area.

You May Like