கடந்த 2023இல் அதிமுக – பாஜக கூட்டணி உடைய முக்கிய காரணமாக இருந்தது அண்ணாமலை தான் என ஒரு கருத்து நிலவுகிறது. இந்நிலையில், அண்ணாமலை இருந்தால் மீண்டும் கூட்டணி அமைவது சிரமம் என்று எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கை ஏற்று டெல்லி ஒரு முக்கிய முடிவை எடுத்து, அண்ணாமலையை நீக்க முடிவு செய்துள்ளது.
அண்ணாமலையின் சமீபத்திய பேட்டிகளும் அதையே உணர்த்துகின்றன. விரைவில் பாஜகவின் மாநில தலைவர் தேர்தல் நடக்க போவதாக சொல்கிறார்கள். அண்ணாமலை மாநில தலைவராக பதவி ஏற்ற காலத்தில் இருந்தே அவர் மாற்றப்பட வேண்டுமென்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், இப்போது அண்ணாமலையை மாற்றவுள்ளதாக செய்திகள் வருகின்றன. ஆனால், உண்மையில் தேர்தல் நெருங்கும் நேரத்தில் அண்ணாமலையை மாற்ற வாய்ப்பு குறைவு தான் என்று சிலர் கூறுகின்றனர்.
ஏனென்றால், அவரை வைத்தே கட்சி திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. தேர்தலை வைத்துக்கொண்டு அவரை மாற்றுவதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு பாஜகவின் புதிய தலைவருக்கான போட்டியில் நான் இல்லை என்று அண்ணாமலை தெரிவித்த நிலையில், அவர் பதவி விலகுவது அல்லது நீக்கப்படுவது உறுதியாகியுள்ளது. இதனால் புதிய தலைவர் பதவிக்கு 6 பேர் லிஸ்டில் உள்ளனர். அதன்படி வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், சரத்குமார், பொன்.ராதாகிருஷ்ணன், ஏபி முருகானந்தம், டெல்லியை சேர்ந்த தமிழ் பின்புலம் கொண்ட ஒரு ஆர்எஸ்எஸ் நிர்வாகி ஆகியோர் உள்ளதாக கூறப்படுகிறது.