fbpx

“ என்னை அப்படி சொல்ல பிடிஆருக்கு என்ன அருகதை இருக்கு.. நீங்க தான் சாபக்கேடு..” அண்ணாமலை காட்டம்

தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை, அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்..

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது “ பழைய வரலாற்றை மறைத்துவிட்டு பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசுகிறார்.. தமிழ்நாட்டின் அரசியலுக்கு அண்ணாமலை சாபக்கேடு என்று சொல்வதற்கு பிடிஆருக்கு என்ன அருகதை உள்ளது.. தமிழ்நாட்டின் அரசியலுக்கு நீங்கள் தான் சாபக்கேடு.. கிழக்கிந்திய கம்பெனியுடன் திமுகவுக்கும் உள்ள தொடர்பு எல்லோருக்கும் தெரியும்.. இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுக்க வேண்டாம் என்று உங்கள் தலைவர்கள் சொல்லவில்லையா..? வெட்கம், மானம், சூடு, சொரணை இல்லாமல் பழைய சரித்திரத்தை மறைத்துவிட்டு, இந்தியாவுக்குபோராடியது 2022-ல் காட்டும்போது பதிலடி கொடுக்க வேண்டியது எங்களின் கடமை..

மிரட்டி பார்த்தால் என்னுடைய பதிலே வேறு மாதிரி இருக்கும். முதல் தலைமுறை பட்டதாரி எத்தனை பேர் திமுகவுக்கு வந்துள்ளனர்.. என்னை அடித்தால், திருப்பி அடிப்பேன்.. இதனால் எதை இழந்தாலும் எனக்கு கவலை.. திமுக மரியாதையான அரசியல் செய்தால் நானும் இரட்டிப்பாக மரியாதை கொடுப்பேன்.” என்று தெரிவித்தார்..

முன்னதாக தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அண்ணாமலையை மறைமுகமாக விமர்சித்து ட்வீட் செய்திருந்தார்.. அவரின் பதிவில் “ தியாகியின் உடலை வைத்து விளம்பரம் தேடுவது, தேசிய கொடி பொருத்தபப்ட்டுள்ள காரில் செருப்பு வீசுவது, அப்பட்டமாக பொய் பேசுவது போன்ற கீழ்தரமான செயல்களின் ஈடுபடும் நபர் தமிழ் சமூகத்தின் சாபக்கேடு என்று பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..

Maha

Next Post

”8 வழிச்சாலை திட்டத்தை ஆதரிக்கும் திமுக”..! வரவேற்கும் மத்திய அமைச்சர்..!

Thu Sep 1 , 2022
”8 வழிச்சாலை திட்டத்தை திமுக ஆதரிப்பது வரவேற்கத்தக்கது” என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த எல்.முருகன், ”விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக முதலமைச்சர் சில பண்டிகைகளுக்கு நேரில் சென்று வாழ்த்துகிறார். ஆனால், விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிப்பதில்லை. திமுக தலைவராக அவர் வாழ்த்து சொல்லாமல் இருக்கலாம் ஆனால் தமிழக முதலமைச்சராக அவர் வாழ்த்து சொல்லாதது பொதுமக்கள் மனதை புண்படுத்தியுள்ளதோடு, […]
”8 வழிச்சாலை திட்டத்தை ஆதரிக்கும் திமுக”..! வரவேற்கும் மத்திய அமைச்சர்..!

You May Like