fbpx

மீண்டும் என்ன ஆச்சு..? தயாளு அம்மாள் திடீர் உடல்நலக்குறைவு..!! மருத்துவமனைக்கு விரைகிறார் CM ஸ்டாலின்..?

தமிழ்நாடு முதல்வர் முக.ஸ்டாலினின் தாயாரான தயாளு அம்மாள் உடல்நலக்குறைவு காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை கோபாலபுரம் இல்லத்தில் தயாளு அம்மாள் வசித்து வருகிறார். அவருக்கு வயது 92. இவருக்கு வயது முதிர்வு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அடிக்கடி மருத்துவ சிகிச்சையில் இருந்து வருகிறார். சமீபத்தில் திடீரென மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், தற்போது மீண்டும் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலையில், திடீரென அவர் வாந்தி எடுத்ததால், பரிசோதனைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இவரின் உடல்நலம் தொடர்பாக இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இதற்கிடையே, தனது தாயாரை பார்ப்பதற்காக முதல்வர் முக.ஸ்டாலின் மருத்துவமனைக்கு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Read More : ’பொதுச்செயலாளர் பதவியில் இருந்து எடப்பாடியே விலகிக் கொண்டால் நல்லது’..!! ’இல்லையென்றால்’..!! பகிரங்கமாக எச்சரித்த ஓபிஎஸ்..!!

Chella

Next Post

மாதவிடாய் நிறுத்தத்தின் போது பெண்களுக்கு மனச்சோர்வு மற்றும் எரிச்சல் அதிகமாகும்..!! என்ன செய்ய வேண்டும்..? - மருத்துவர் விளக்கம்

Thu Mar 27 , 2025
Depression and irritability can increase in women between 45 and 50, know reasons from expert

You May Like