T20 World Cup: T20 உலகக் கோப்பை தொடரில் ஆரம்பம் முதல் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்கார் விராட் கோலி தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
டி20 உலகக்கோப்பை போட்டியின் இங்கிலாந்து – இந்தியா அணிகளுக்கிடையேயான அரையிறுதி ஆட்டம் நேற்று நடைபெற்றது. மழை குறுக்கிட்டதால் டாஸ் தாமதமாக போடப்பட்டது. முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் ஷர்மா- விராட் கோலி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இருப்பினும், 9 ரன்களில் அவுட்டாகி விராட் கோலி அதிர்ச்சியளித்தார். அதன்பின், ரிஷப் பண்ட் 4 ரன்களில் வெளியேறினார். பின்னர் சூர்ய குமார்யாதவுடன் ஜோடி சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் ஷர்மா, அரைசதம் கடந்து 57 ரன்களில் ஆட்டமிழந்தார். சூர்ய குமார் யாதவ் 47, ஹர்திக் பாண்ட்ய 23, ஜடேஜா 17 ரன்கள் எடுத்தனர். 20 ஓவர் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் எடுத்திருந்தது.
அரையிறுதி போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 9 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அந்தவகையில், இதுவரை 7 போட்டிகளில் விளையாடி வெறும் 75 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். கோலி தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் அவரது ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.
172 ரன்கள் எடுத்தா வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி வீரர்கள், இந்திய பவுலர்களை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால், அந்த அணி 16.4 ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 103 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதன்படி, 68 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது. இந்திய அணியில் அதிகபட்சமாக அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பும்ரா 2 விக்கெட்டுகளை எடுத்தார்.
Readmore: ‘ஆபத்தானது’!. வேகமாக பரவும் LB.1 புதிய வகை கொரோனா!. கதிகலங்கும் அமெரிக்கா!