தமிழக அமைச்சர்களில் வயதிலும், அரசியல் அனுபவத்திலும் மிகவும் மூத்தவர் திகழ்ந்து வரும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் (86), இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள வீட்டில் அவர் இருந்தபோது, அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
துரைமுருகனுக்கு சளித் தொல்லையால் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தொடர் சிகிச்சைப் பின் தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் கூறியுள்ளனர். இதையடுத்து, சிகிச்சையில் உள்ள துரைமுருகனை முதலமைச்சர் முக.ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் நேரில் சென்று துரைமுருகன் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர்.
Read More : ’என்னை அலையவிடுறாங்க’..!! கைதாகிறாரா சீமான்..? வலை விரித்த போலீஸ்..!! பரபரப்பில் தம்பிகள்..!!