fbpx

நீட் விலக்கு மசோதா என்ன ஆச்சு..? குடியரசுத் தலைவரே சொன்ன முக்கிய தகவல்..!!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய நீட் விலக்கு மசோதா தொடர்பாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர், சு.வெங்கடேசன் நீட் விலக்கு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசால், தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவுக்கு உள்துறை அமைச்சகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதற்கு குடியரசுத் தலைவர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சு.வெங்கடேசனின் கடிதத்திற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதிலளித்துள்ளார். நீட் விலக்கு மசோதா உள்துறை அமைச்சகத்தின் மேல் நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டுள்ளது என எம்.பி சு.வெங்கடேசன் அனுப்பிய கடிதத்துக்கு குடியரசுத் தலைவர் பதிலளித்துள்ளார்.

Chella

Next Post

பட்டப் பகலில் துணிகரம்! அரசு ஆஸ்பத்திரி முன்பு ஓட ஓட விரட்டி படுகொலை! காவல்துறை வலை வீச்சு!

Tue Mar 14 , 2023
தென்காசி அருகே ஜாமீனில் வெளியே வந்த நபர் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள ஊர் தேவிபட்டனம். இந்த ஊரைச் சார்ந்த கருப்பையா என்பவரது மகன் செல்வகுமார் வயது 40. இவர் ஒரு கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த பதினொன்றாம் தேதி தான் சிறையில் இருந்து ஜாமீனில் […]

You May Like