உத்திர பிரதேசம் மாநிலம் நொய்டாவில் இரண்டு வயது சிறுமியின் சடலம் அழுகிய நிலையில் லேப்டாப் பேக்கிலிருந்து எடுக்கப்பட்ட விவகாரம் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். உத்திரபிரதேசம் மாநிலம் நொய்டா பகுதியைச் சார்ந்தவர் சிவகுமார் இவரது மனைவி மஞ்சு இந்த தம்பதியினருக்கு மான்சி என்ற இரண்டு வயது பெண் குழந்தை இறந்தது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சிவகுமார் மற்றும் மஞ்சு ஆகியோர் வெளியே சென்று வந்துள்ளனர். அவர்கள் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது தங்களது மகள் வீட்டில் இல்லை.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குழந்தையின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இவர்களது புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் தீவிரமாக விசாரணையில் இறங்கினர். அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை செய்ததில் அருகில் இருந்த ஒரு வீட்டில் துர்நாற்றம் வீசியது. இதனைத் தொடர்ந்து சோதனைக்காக அந்த வீட்டிற்கு சென்றனர் காவல்துறையினர். ஆனாலும் அந்த வீடு பூட்டி இருந்தது. இதனைத் தொடர்ந்து பூட்டை உடைத்து உள்ளே சென்று சோதனை செய்தபோது லேப்டாப் பேக் அதிலிருந்து துர்நாற்றம் வீசுவது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த பையை சோதனை செய்ததில் காணாமல் போன குழந்தை மான்சி அழுகிய நிலையில் பிணமாக மீட்டெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து உடலை பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த காவல்துறையினர் அந்த வீட்டிலிருந்து தப்பி ஓடிய நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.