fbpx

இந்த மாத்திரைகளை அதிகமாக உட்கொண்டால் என்ன ஆகும்?… 5 பக்கவிளைவுகள் இதோ!… WHO எச்சரிக்கை!

Antibiotic pill: கொரோனா பரவலின் போது நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் பயன்பாடு அதிகளவில் இருந்ததாக WHO-ன் சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளது. எனவே, ஆண்டிபயாடிக் மாத்திரைகளை அதிகமாக உட்கொள்வதால் ஏற்படும் 5 பக்க விளைவுகள் குறித்து இந்த தொகுப்பில் அறிந்துகொள்வோம்.

2019ம் ஆண்டு பரவிய கொரோனா தொற்றுநோய் உலகை கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் முடக்கியது. அப்போதிருந்து, உலகம் முழுவதும் வாழ்க்கை முறை முற்றிலும் மாறிவிட்டது. இந்த கொடிய தொற்றுநோய் மில்லியன் கணக்கான உயிர்களைக் கொன்றது, மில்லியன் கணக்கானவர்கள் பாதிப்படைந்தனர். நோயாளிகளை ஆரோக்கியமாக மீட்டெடுக்கும் முயற்சியில், மருத்துவ வல்லுநர்கள் தங்களால் இயன்றதைச் செய்தனர். இருப்பினும், இந்த காலகட்டத்தில் நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் பயன்பாடு அதிகமாக காணப்பட்டது என்று உலக சுகாதார அமைப்பு (WHO) வெளியிட்ட சமீபத்திய அறிக்கையில் தகவல் தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் (WHO) புதிய சான்றுகள் உலகளவில் COVID-19 தொற்றுநோய்களின் போது நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் விரிவான பயன்பாட்டைக் காட்டுகிறது, இது ஆண்டிமைக்ரோபியல் எதிர்ப்பின் (AMR) “அமைதியான” பரவலை அதிகப்படுத்தியதாக கூறப்படுகிறது. COVID-19 உடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளில் 8% பேருக்கு மட்டுமே நுண்ணுயிர் எதிர்ப்பிகள் தேவைப்படும். ஆனால், நான்கில் மூன்று அல்லது 75% நோயாளிகள் நுண்ணுயிர் எதிர்ப்பிகளுடன் சிகிச்சை பெற்றுள்ளனர்.

ஆண்டிபயாடிக் பயன்பாடு மேற்கு பசிபிக் பிராந்தியத்தில் உள்ள நோயாளிகளுக்கு 33% முதல் கிழக்கு மத்தியதரைக் கடல் மற்றும் ஆப்பிரிக்க பிராந்தியங்களில் 83% வரை இருந்தது. 2020 மற்றும் 2022 க்கு இடையில், ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் காலப்போக்கில் மருந்துகள் குறைந்துவிட்டன, அதே நேரத்தில் அவை ஆப்பிரிக்காவில் அதிகரித்தன. எதையும் அதிகமாக உட்கொள்வது மோசமானது மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் சில பக்க விளைவுகளை ஏற்படுத்திவிடும்.

ஆண்டிபயாடிக் மாத்திரைகளை அதிகமாக உட்கொள்வதால் ஏற்படும் 5 பக்க விளைவுகள்: குடல் இயக்கத்தில் பாதிப்பு : உடலில் கெட்ட பாக்டீரியாக்கள் இருப்பதுபோல் நல்ல பாக்டீரியாக்களும் உள்ளன. அவை குடல் இயத்தை பராமரித்து சீரான செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகின்றன. இந்நிலையில் நீங்கள் அளவுக்கு அதிகமாக ஆன்டிபயாடிக் மாத்திரைகளை உட்கொண்டால் அவை நல்ல பாக்டீரியாக்களையும் அழித்துவிடும். இதனால் நீங்கள் தேவையற்ற உடல் நல பாதிப்புகளை அனுபவிக்கக் கூடும்.

பலரும் காய்ச்சல், சளிக்கு உடனே ஒரு ஆன்டிபயாடிக் மாத்திரையை போட்டுவிடுவார்கள். ஆனால் அது பின் விளைவாக தேவையற்ற பக்கவிளைவுகளை உண்டாக்கலாம். குறிப்பாக பலர் வயிற்றுப்போக்கு பிரச்சனையால் பாதிகப்படுவார்கள். Centers for Disease Control and Prevention கூறும் தகவல் படி சளி மற்றும் இருமல் காரணமாக பெற்றோர்கள் குழந்தைகளுக்கும் மருத்துவரின் பரிந்துரையின்றி ஆன்டிபயாடிக் மாத்திரைகளை கொடுக்கின்றனர். இதனால் குடல் இயக்கம் கடுமையாக பாதிக்கப்பட்டுவயிற்றுப்போக்கு பிரச்சனையால் 1000க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஒவ்வொரு வருடமும் இறப்பதாக தகவல் தெரிவிக்கிறது.

ஆன்டிபயாடிக் மாத்திரை என்பது கடுமையான பாக்டீரியாக்களை அழிப்பதற்கே.. ஆனால் அது பெரும்பாலான நேரங்களில் நல்ல பாக்டீரியாக்களையும் சேர்த்தே அழிப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் பூஞ்சை தொற்று பாதிப்பிலிருந்து உங்களை பாதுகாக்கும் நல்ல பாக்டீரியாக்களும் அழிந்துவிடுகிறது. எனவே பூஞ்சை தொற்றுகளின் பெருக்கம் அதிகரித்து அடிக்கடி வாய், தொண்டை , காது போன்ற இடங்கள் பூஞ்சை தொற்றால் பாதிக்கப்படுகின்றன. பெண்களுக்கு வஜைனா தொற்று அதிகரிக்க காரணமாகவும் அமைகிறது.

Readmore: ஏலியனா?… மற்றொரு கிரகத்தில் உயிரினங்களின் வாழ்க்கை!… ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியில் கிடைத்த ஆச்சரியம்!

Kokila

Next Post

அலெர்ட்!… உங்க போனில் இந்த App இருக்கா?… தனிப்பட்ட தகவலை திருடும் அதிர்ச்சி!

Sun Apr 28 , 2024
Dating App: சமீபகாலமாக ஆன்லைன் டேட்டிங் தளங்களில் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. என்னது டேட்டிங் தளம் மட்டுமா என்று ஆச்சரியப்பட வேண்டாம். திருமணத்திற்கு வரண் தேடும் தளங்களும் இந்த மோசடிகளுக்கு ஆதரவாக இருப்பது தான் வேடிக்கை. பணத்தை செலுத்தினால், அனைத்து தகவல்களையும் வழங்கும் மேட்ரிமோனி தளங்கள் டேட்டிங் தளங்களுக்கு எந்த வகையிலும் குறைந்தது இல்லை. இதனால் இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட மூன்றில் இரண்டு பங்கு (66%) நபர்கள் ஆன்லைன் […]

You May Like