fbpx

‘இப்படியே போச்சுன்னா எப்படி’..? தினசரி உயரும் தங்கம் விலை..!! ரூ.46 ஆயிரத்தை கடந்தது..!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.520 உயர்ந்துள்ளதால், நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை தினந்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, தங்கம் விலை கடந்த சில தினங்களுக்கு முன்னர் சரிவை சந்தித்த நிலையில், இன்று ஏற்றம் கண்டுள்ளது.

சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.45,640 ஆகவும், கிராமுக்கு ரூ.5,705 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனையானது. இந்நிலையில், இன்று தங்கம் சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்து, ரூ.46,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிராம் 65 ரூபாய் உயர்ந்து ரூ.5,770-க்கு விற்பனையாகிறது.

இந்த மாதம் முழுவதுமே ஏற்ற இறக்குத்துடன் தங்கம் விலை காணப்படுகிறது. சவரன் தங்கம் ரூ.46,000-ஐ கடந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியும், கவலையும் அடைந்துள்ளனர். அதேபோல் வெள்ளி நேற்று ஒரு கிராம் ரூ.77.50-க்கு விற்பனையான நிலையில், இன்று எவ்வித மாற்றமும் இன்றி அதே விலைக்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.₹77,500 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Chella

Next Post

மெக்சிகோவை புரட்டி போட்ட ஓடிஸ் புயல்..!! 27 பேர் பரிதாப பலி..!! மக்கள் கடும் பாதிப்பு..!!

Sat Oct 28 , 2023
மெக்சிகோவின் பசிபிக் கடற்கரையைத் தாக்கிய மிக வலிமையான புயல்களில் ஒன்றான ஓடிஸ் புயலால் 27 பேர் உயிரிழந்துள்ளனர். பசிபிக் பெருங்கடல் கடற்கரையில் அமைந்துள்ள மெக்சிகோவில் ஓடிஸ் சூறாவளி மணிக்கு 230 கி.மீ வேகத்தில் அதன் கரையை தாக்கியது. இதனால், பலத்த காற்று மற்றும் மழை பெய்தது. அகாபுல்கோ பகுதிகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. இந்த புயலால் மக்களின் வீடுகள், வெளியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள், மின்கம்பங்கள், மரங்கள் என ஏராளமானவை சேதங்கள் ஆகியுள்ளன. […]

You May Like