fbpx

’யாரு அடிபட்டு கிடந்தா என்ன.. நமக்கு வீடியோ தான் முக்கியம்’..!! ’உயிருக்கு போராடிய சிறுமி.. உதவ முன்வராத அவலம்’..!!

ரத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில், சிறுமி ஒருவர் உதவி கேட்டும், அவரை மீட்காமல் அங்கு கூடியிருந்தவர்கள் மனிதாபிமானம் இன்றி செல்போன்களில் வீடியோ எடுத்த அவலம் உத்தரப்பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் கன்னுஞ்ச் மாவட்டத்தை சேர்ந்த 13 வயது சிறுமி, கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டில் இருந்து திடீரென மாயமானதாக கூறப்படுகிறது. மாயமான சிறுமியை குடும்பத்தினர் தேடி வந்த நிலையில், பலத்த காயங்களுடன் அந்த சிறுமி அடிபட்டு கிடந்தது தெரியவந்தது. தலை உள்பட பல இடங்களில் ரத்தக் காயங்களுடன் அடிப்பட்டு உயிருக்கு போராடி வந்த சிறுமி, உதவி அளிக்குமாறு குரல் கொடுக்கிறார். சிறுமி ஒருவர் அடிபட்டு கிடப்பதை கவனித்த அப்பகுதியை சேர்ந்த மக்கள் அங்கு திரண்டனர். ஆனால், யாருமே சிறுமியை காப்பாற்ற முன்வரவில்லை என்பதுதான் கொடுமையிலும் கொடுமை.. வலியால் துடிக்கும் அந்த சிறுமியை ஒருவர் கூட காப்பாற்ற முன்வராமல் இருந்தனர்.

’யாரு அடிபட்டு கிடந்தா என்ன.. நமக்கு வீடியோ தான் முக்கியம்’..!! ’உயிருக்கு போராடிய சிறுமி.. உதவ முன்வராத அவலம்’..!!

மனிதாபிமானம் மரித்து விட்டதோ என்று எண்ணும் அளவுக்கு ஒருவர் கூட சிறுமியை காப்பாற்றிவிட முன்வராமல் தங்கள் செல்போனில் படம் பிடிப்பதிலேயே குறியாய் இருந்துள்ளனர். பல்வேறு கோணங்களில் சிறுமி உதவி கேட்டு அலறுவதை சிலர் தங்கள் செல்போனில் படம் படித்தது வேதனையிலும் வேதனை. கொஞ்சம் கூட சலனம் இன்றி உதவ எந்த அக்கறையும் காட்டாமல் வீடியோ எடுக்கும் காட்சிகளில் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டதா? என கூட்டத்தில் நிற்கும் ஒருவர் கேட்கிறார். அப்போது ஒருவர் போலீஸ் அதிகாரியின் போன் நம்பரை கேட்கிறார். அதன்பிறகே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

’யாரு அடிபட்டு கிடந்தா என்ன.. நமக்கு வீடியோ தான் முக்கியம்’..!! ’உயிருக்கு போராடிய சிறுமி.. உதவ முன்வராத அவலம்’..!!

போலீசார் வந்து மீட்கும் வரை சிறுமி அதே இடத்தில் காயங்களுடன் வலியால் துடித்தபடி உயிருக்கு போராடியுள்ளார். தகவல் கிடைத்ததும் நிகழ்விடத்திற்கு வந்த போலீசார் சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீஸ் தரப்பு கூறுகையில், “காயம் அடைந்த நிலையில், சிறுமி மீட்கப்பட்டு உள்ளார். சிகிச்சைக்காக உள்ளூர் மருத்துவமனையில் சிறுமியை அனுமதித்துள்ளோம். சிறுமியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்றனர். சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்டாரா? என்ற முழு விசாரணைக்கு பிறகே தெரியவரும்.

Chella

Next Post

விக்கி-நயன் குழந்தை விவகாரம்..!! விதிகளை மீறிய மருத்துவமனை..!! வெளியாகிறது அறிக்கை..!! பாய்கிறது நடவடிக்கை..!!

Tue Oct 25 , 2022
நயன்தாரா இரட்டை குழந்தை விவகாரத்தில் ஓரிரு நாளில் அறிக்கை வெளியிடப்படும் என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. நடிகை நயன்தாராவின் காதல், கல்யாணம், குழந்தை என எல்லாமே பரபரப்பாக பேசப்படும் விஷயமாகி விட்டது. நம்பர் ஒன் நடிகையாக இருக்கும் நயன்தாராவின் வாழ்க்கையும் சினிமாவை போலவே பரபரப்பு, எதிர்பார்ப்பு நிறைந்ததாக மாறிவிட்டது. நயன்தாராவின் காதல் கிளைமாக்ஸ் காட்சி, இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் அரங்கேறியது. 6 ஆண்டுகளாக காதலித்தவர்கள் ஒன்றாகவே வாழ்ந்தும் வந்தார்கள். இந்நிலையில் […]
விக்கி-நயன் குழந்தை விவகாரம்..!! விதிகளை மீறிய மருத்துவமனை..!! வெளியாகிறது அறிக்கை..!! பாய்கிறது நடவடிக்கை..!!

You May Like