fbpx

தென் கொரியாவில் என்ன நடக்கிறது?. அதிபர் பிரகடனம் செய்த அவசரநிலை!. சில மணி நேரங்களில் முடிவுக்கு வந்த ராணுவ சட்டம்!

South Korea: தென்கொரியா அரசு திடீரென இரவோடு இரவாக அவசரநிலை பிரகடணத்தை அறிவித்து சில மணி நேரங்களிலேயே வாபஸ் பெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென் கொரியாவுக்கு, வடகொரியாவால் அண்மை காலமாக பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. எல்லைகளை பாதுகாப்பதில் இருநாடுகளுக்கு இடையே கடுமையான மோதல் போக்கு இருந்து வருகிறது. இந்த நிலையில் தென்கொரியாவில் திடீரென அவசர நிலை பிரகடனத்தை அந்நாட்டு அதிபர் யூன் சுக் யோல் அறிவித்தார். இந்த திடீர் அறிவிப்பால் உலக நாடுகள் பதற்றம் அடைந்தன. இதற்கு முக்கிய காரணமாக கம்யூனிச சக்திகள் உள்ளன என்று கூறப்படுகிறது.

மேலும், வடகொரியாவுக்கு மறைமுகமாக தென்கொரியாவின் மந்திரிகள் ஆதரவு தெரிவிப்பது பற்றி தென்கொரிய அதிபருக்கு தெரியவந்துள்ளதாகவும், இதையடுத்து பாதுகாப்பு கருதி அவர் அவசர கால பிரகடணத்தை அறிவித்து உள்ளதாகவு கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து, தேசிய அவசர நிலை பிரகடனத்தை அறிவித்த அதிபரின் உத்தரவை முடக்கும் வகையில் நடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. நாடளுமன்றத்தில் உள்ள 300 எம்பிக்களில் 190 எம்பிக்கள், தேசிய அவசர நிலை பிரகடனத்தை நீக்க வேண்டும் என்று வாக்களித்தனர். அவசர நிலை பிரகடனத்தை அதிபர் ரத்து செய்யும் வரை அமலில் தான் இருக்கும் என்று ராணுவம் அறிவித்துள்ளது. நாடாளுமன்றத்திற்குள் போராட்டக்காரர்கள் நுழைய முயன்றனர். அவர்களை ராணுவம் தடுத்து நிறுத்தியதால் அங்கு மோதல் ஏற்பட்டது.

உள்நாட்டில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியதால், தென்கொரிய அதிபர் யூன் சுக் யோல் அவசர நிலை பிரகடனத்தை அறிவித்த 6 மணி நேரத்திற்குள் தனது முடிவை வாபஸ் பெற்றுள்ளார். தென்கொரிய நேரப்படி அதிகாலை 4.30 மணிக்கு தொலைக்காட்சியில் உரையாற்றிய அந்நாட்டு அதிபர் யூன் கூறியதாவது:- சில மணி நேரத்திற்கு முன்பாக அவசர நிலையை வாபஸ் பெற வேண்டும் என்று தேசிய சபையில் கோரிக்கை வைக்கப்பட்ட்டது. தேசிய சபையின் இந்த கோரிக்கையை ஏற்று அவசர நிலையை வாபஸ் வாங்குகிறோம். கேபினட் கூட்டம் வாயிலாக இந்த முடிவு எடுக்கப்படுமிறது” என்றார்.

Readmore: நாளை ஒரு நாள் மட்டும்… பத்திரப் பதிவு செய்யும் நபர்களின் கவனத்திற்கு…! அரசு முக்கிய அறிவிப்பு

Kokila

Next Post

PM கிசான் திட்டத்தின் கீழ் ரூ.6000 பெற e-Kyc கட்டாயம்...! மத்திய அரசு தகவல்

Wed Dec 4 , 2024
e-Kyc mandatory to get Rs 6000 under PM Kisan Yojana

You May Like