fbpx

இது என்ன புதுசா இருக்கு..? 80-20 டயட் முறை பற்றி தெரியுமா..? இனி தொப்பையை ஈசியா குறைக்கலாம்..!!

இன்றைய வாழ்க்கைச் சூழலில் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வது பலருக்கும் சவால் மிகுந்ததாக உள்ளது. அதிக உடல் இயக்கமற்ற வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கம் போன்ற காரணங்களால் உடல் பருமன் ஏற்படுகிறது. இதனால் உடல் எடையை குறைக்க பல விதமான உத்திகளை மக்கள் கையாள தொடங்குகின்றனர். பேலியோ டயட், கீடோ டயட் என பல விதமான டயட் முறைகளை நீங்கள் தெரிந்து வைத்திருப்பீர்கள். ஆனால், 80-20 என்ற டயட் முறை குறித்து நீங்கள் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை. அதென்ன 80க்கு 20 என்று தோன்றுகிறதா? 80 சதவீத சமயங்களில் ஆரோக்கியமான உணவுகள், ஊட்டச்சத்து கொண்ட உணவுகளை உட்கொள்ள வேண்டும். மீதமுள்ள 20 சதவீத சமயங்களில் உங்களுக்கு விருப்பமான உணவுகளை சாப்பிடலாம்.

அதாவது உணவுக் கட்டுப்பாடு என்ற பெயரில் உங்களுக்கு பிடித்தமான உணவுகளை ஒட்டுமொத்தமாக ஒதுக்கிவிடாமல் அவ்வபோது அவற்றை சாப்பிடலாம். உங்களுக்கு பிடித்தமான பீட்ஸா அல்லது ஐஸ்க்ரீம் போன்றவற்றை நீங்கள் விட்டுக் கொடுக்க வேண்டியதில்லை. இவற்றை மிதமான அளவில் எடுத்துக் கொள்ளலாம். 80க்கு 20 டயட் முறையானது உங்கள் வாழ்க்கையை ஆரோக்கியமானதாக மாற்றும் மற்றும் உடல் எடையை குறைக்க உதவும். இந்தத் திட்டத்தில் மிகத் தீவிரமான உணவுக் கட்டுப்பாடு எதுவும் கிடையாது. உங்கள் விருப்பத்திற்கு உட்பட்டு சீரான உணவுகளை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம். இதனால் கீழ்காணும் பலன்கள் உங்களுக்கு கிடைக்கும்.

முயற்சிக்க எளிமையானது : மற்ற டயட் திட்டங்களில் பெரும்பாலும் கலோரிகளை கணக்கிட்டு சாப்பிடும் வகையில் கடுமையான கட்டுப்பாடுகள் இருக்கும். ஆனால், இங்கு உங்கள் விருப்பம்போல ஆசையான உணவுகளை கொஞ்சமாக எடுத்துக் கொள்ளலாம். இதனால், உங்களுக்கு உணவு குறித்த ஏக்கம் உண்டாகாது மற்றும் ஏமாற்றம் ஏற்படாது.

ஆரோக்கியமான உணவுப்பழக்கம் : 80 சதவீத சமயங்களில் ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளில் நீங்கள் கவனம் செலுத்துவதால், உங்கள் உடல் எடை குறைவதுடன், ஆரோக்கியம் மேம்படும். இது நீண்ட கால பலன்களை கொடுக்கும்.

அனைத்து தேவைகளை பூர்த்தி செய்யும் : உணவில் வெவ்வேறு பண்பாட்டு முறைகளை பின்பற்றுவோருக்கும் இது உகந்தது. ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை சுவையாக சாப்பிடுவதற்கு வாய்ப்பு கிடைக்கிறது. அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய உணவுகளை மட்டும் ஒதுக்கினால் போதுமானது.

சீரான மனநிலை : அனைத்து உணவுகளையும் மிதமான அளவில் உட்கொள்ள வாய்ப்பு இருப்பதால் உங்களுக்கு சீரான மனநிலை ஏற்படும். அனைத்து உணவுகளை சாப்பிட்ட திருப்தியான உணர்வு உங்களுக்கு கிடைக்கும்.

நீண்டகால பலன் : 80க்கு 20 உணவுத்திட்ட முறையானது நீண்ட கால பலன்களை தரும். உடல் எடையை குறைப்பது என்றாலும் சரி, கட்டுக்கோப்பான உடல்வாகை தக்கவைத்துக்கொள்வது என்றாலும் சரி, இந்த உணவுத் திட்ட முறை உங்களுக்கு கை கொடுக்கும்.

Chella

Next Post

இளைஞர்களே ட்ரெக்கிங் செல்ல நினைக்கிறீர்களா..? கண்டிப்பா இந்த விஷயங்களை மறந்துறாதீங்க..!!

Tue May 9 , 2023
ட்ரெக்கிங் அல்லது மலை ஏற்றம் என்பது அனைவரது வாழ்க்கையில் ஒரு முறையாவது முயற்சிக்க வேண்டிய ஒரு சாகச பயணமாகும். இயற்கையோடு ஒன்றி ஒரு பயணம் செல்லும்போது, அது உடலையும் மனதையும் புத்துணர்ச்சி அடைய செய்யும். அதே நேரம் உடல் வலிமைக்கும், மன உறுதிக்கும் சவால் விடும். அதை எதிர்கொள்ள சில தயாரிப்புகள் தேவை. அவற்றை தான் இந்தப் பதிவில் பார்க்க இருக்கிறோம். உடல் தகுதி மற்றும் ஆரோக்கியம் : கடினமான மலையேற்றத்திற்குச் […]

You May Like